Vijay tv Serial: சீரியலுக்கு பஞ்சமே இல்லை என்று சொல்வதற்கு ஏற்ப சின்னத்திரையில் போட்டி போட்டு சில சேனல்கள் புதுப்புது சீரியல்களை ஒளிபரப்பு செய்து வருகிறது. அந்த வகையில் டிஆர்பி ரேட்டிங்கில் இரண்டாவது இடத்தில் இருக்கும் விஜய் டிவி கிட்டத்தட்ட 14 சீரியல்கள் மூலம் மக்களை கவர்ந்து வருகிறார்கள்.
மதியம் 1.30க்கு ஆரம்பித்து இரவு 10 மணி வரை தொடர்ந்து சீரியல்கள் ஒளிபரப்பு செய்து வருகிறார்கள். ஆனாலும் புது புது சீரியல்களை அவ்வப்பொழுது கொண்டு வந்து டிஆர்பி ரேட்டிங்கில் சிம்மாசனத்தில் இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் ஒளிபரப்பாகி வந்த புத்தம் புது சீரியல் ஜெட் வேகத்தில் பறந்து மக்கள் மனதை கவர்ந்து விட்டது.
முக்கியமாக விஜய் டிவி ரசிகர்கள் கொண்டாடும் விஜய் காவிரி சேர்ந்து நடித்து வரும் மகாநதி சீரியலையே ஓரம் கட்டும் அளவிற்கு வந்து கொஞ்ச நாளிலேயே மக்கள் மனதில் இடம் பிடித்து விட்டது. அந்த சீரியல் வேறு எதுவும் இல்லை இரவு 8.30 மணிக்கு வரும் அய்யனார் துணை சீரியல்தான்.
இதில் சேரன் கேரக்டர் அதிக அளவில் மக்களை கவர்ந்திருக்கிறது, அத்துடன் சோழன் மற்றும் நிலாவின் கெமிஸ்ட்ரி பாண்டியனின் நடிப்பும் மக்களை கவர்ந்ததால் இந்த சீரியலுக்கு தொடர்ந்து மக்கள் ஆதரவு கொடுத்து வருகிறார்கள். தற்போது எங்கு திரும்பினாலும் அய்யனார் துணை சீரியல் தான் பெஸ்ட் என்று சொல்லும் அளவிற்கு மக்கள் மனதில் இடம் பிடித்து விட்டது.
அந்த வகையில் இந்த வாரம் வெளிவந்த டிஆர்பி ரேட்டிங்கில் பாக்யா மற்றும் மகாநதி சீரியலை ஓரங்கட்டி 6.21 புள்ளிகளை பெற்று நான்காவது இடத்தில் இருக்கிறது. இன்னும் வருகிற சில வாரங்களில் முதல் இடத்தை பிடித்து மற்ற சீரியல்களை பின்னுக்கு தள்ளிவிடும். அந்த அளவிற்கு அய்யனார் துணை சீரியலில் நடிக்கும் கதாபாத்திரங்கள் அனைத்தும் மக்களை கவர்ந்து விட்டது.