Vijay Tv Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சீரியல்களில் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் ஐந்து இடத்தை பிடித்த சீரியல்கள் சிறகடிக்கும் ஆசை, அய்யனார் துணை, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2, மகாநதி மற்றும் சின்ன மருமகள். இந்த சீரியல்கள் தான் தொடர்ந்து முதல் ஐந்து இடத்தை பிடித்து வருகிறது.
ஆனால் டிஆர்பி ரேட்டிங்கில் இடம் பெற வேண்டும் என்றால் கதை ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கம் எந்த நேரத்தில் சீரியல்கள் ஒளிபரப்பாகிறது என்பதை பொறுத்தும் அதிக புள்ளிகளை பெற்று வரும். அப்படித்தான் ஆகா கல்யாணம் சீரியல் ஆரம்பத்தில் 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்தது.
அதனால் முதல் ஐந்து இடத்திற்குள் டிஆர்பி ரேட்டிங்கில் இடம் பிடித்தது. ஆனால் சமீபத்தில் மகாநதி சீரியலை 7.30 மணிக்கு மாற்றிவிட்டு ஆகா கல்யாணம் சீரியலை 6:00 மணிக்கு மாத்தி விட்டார்கள். அப்போதிலிருந்து டிஆர்பி ரேட்டிங்கில் ஆகா கல்யாணம் சீரியல் துவண்டு போய்விட்டது.
அந்த வகையில் இந்த வாரம் வெளிவந்த டிஆர்பி ரேட்டிங்கில் ஆகா கல்யாணம் சீரியல் தான் 1.57 புள்ளிகளை பெற்று கடைசி இடத்தில் இருக்கிறது. அதனால் இந்த சீரியல் இன்னும் ஒரு சில வாரங்களில் முடியப்போகிறது. இதுவரை காதலை சொல்லாமல் மனதிற்குள் வைத்திருந்த சூர்யா, குடும்பத்தின் முன் மகா சந்தோசப்படும்படி காதலை தெரிவித்து விட்டார்.
காதலை தெரிவித்த கையோடு விஜய் டிவியில் இந்த சீரியல் முடிவுக்கு வரப்போகிறது. இதற்கிடையில் பொன்னி சீரியல் இந்த மாதத்தில் முடியப்போகிறது. இதனை அடுத்து சக்திவேல் சீரியலும் முடியப்போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.