கண் கூசும் அளவிற்கு ரொமான்டிக் சீன்.. அத்து மீறும் விஜய் டிவி சீரியல், ரொம்ப ஓவரா போறீங்க பாஸ்!

Vijay TV: விஜய் டிவி சீரியல் என்றாலே கொஞ்சம் அபத்தம் அதிகமாகவே இருக்கும். அதிலும் சின்ன மருமகள் சீரியலின் நேற்றைய எபிசோடு நேற்றைய எபிசோடு கண்கள் கூசும் அளவிற்கு இருந்தது. பிரபல சின்னத்திரை நடிகர் நவீன் ஹீரோவாக நடிக்கும் சீரியல் தான் சின்ன மருமகள்.

படிக்க வேண்டும் என ஆசைப்படும் பெண்ணை சந்தர்ப்ப சூழ்நிலையால் ஹீரோ திருமணம் செய்து கொள்வது, பின்னர் அவளை படிக்க வைக்க உதவி செய்வது என்பதுதான் இந்த நாடகத்தில் மையம். இதைத் தாண்டி இவர்களுக்குள் நடக்கும் சண்டை சச்சரவுகள் தான் அன்றாட எபிசோடுகளாக ஒளிபரப்பாகி கொண்டு இருக்கிறது.

ரொம்ப ஓவரா போறீங்க பாஸ்!

போலீசுக்கு போன் பண்ணி கல்யாணத்தை நிறுத்த ஏற்பாடு செய்தது தமிழ் தான் என தெரிந்த பிறகு சேது மற்றும் தமிழுக்கு இடையே பெரிய விரிசல் விழுந்தது. பின்னர் சேதுவின் அப்பா தேர்தலில் நின்று ஜெயிப்பதற்கு தமிழ் உதவி செய்ததால் சேது மனம் மாறிவிட்டான்.

இதைத் தொடர்ந்து செய்து மற்றும் தமிழுக்கு இடையேயான கெமிஸ்ட்ரி வேற லெவலில் வொர்க் அவுட் ஆகி கொண்டிருக்கிறது. நேற்றைய எபிசோடில் சேதுபதி உடம்பு முழுக்க எண்ணெய் தேய்த்து விட்டு இருவரும் ரொமான்டிக்காக பாடலுக்கு ஆடுவது போல் காட்சி வந்திருந்தது.

இப்படி ஒரு காட்சியை எப்படி குடும்பத்துடன் பார்ப்பார்கள், குழந்தைகள் பார்க்கும் சீரியலில் இது போன்ற காட்சிகளை வைப்பது ரொம்பவும் தவறான விஷயம். இனி விஜய் டிவிக்கு போட்டியாக நாங்களும் சீரியலில் ரொமான்டிக் காட்சிகளை வைக்கிறோம் என எத்தனை சேனல்கள் கிளம்ப போகிறது என தெரியவில்லை.

Vijay TV serial
Vijay TV serial
arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →

Leave a Comment