டம்மியான சீரியலை வைத்துவிட்டு, ஹிட் சீரியலை முடிக்கும் விஜய் டிவி.. டிஆர்பி ரேட்டிங்கால் எடுத்த விபரீத முடிவு

Vijay Tv Serial: சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் என்றாலே இல்லத்தரசிகளின் பொழுதுபோக்காக தான் பார்க்கப்படுகிறது. எத்தனையோ நிகழ்ச்சிகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்தாலும் ஒவ்வொருவரையும் தினமும் பார்க்கும் படியாக ஈர்ப்பை உண்டாக்குவது சீரியல் மட்டும்தான். அதனால் தான் சில சேனல்கள் போட்டி போட்டு சீரியலை கொண்டு வருகிறார்கள்.

ஆனால் அப்படி வந்த சீரியல்கள் எல்லாமே மக்களை கவரவில்லை. ஆனாலும் தொடர்ந்து அந்த சீரியல்கள் எல்லாம் ஒளிபரப்பாகி தான் வருகிறது. எந்த சீரியல்கள் மக்களை அதிகமாக கவர்ந்திருக்கிறது என்பதை ஒவ்வொரு வாரமும் வெளிவரும் டிஆர்பி ரேட்டிங் படி தான் கணித்து வருகிறோம்.

அதன்படி தான் அந்த சீரியல்கள் எல்லாம் போய்க் கொண்டிருக்கிறது. அந்த வகையில் பாக்கியலட்சுமி சீரியல் தற்போது டம்மியாக தான் போய்க்கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் கதையும் எதுவும் இல்லை, பார்ப்பதற்கு சுவாரசியமாகவும் இல்லை, அரைத்த மாவை தான் அரைச்சு கொண்டு வருகிறார்கள் என்று கமெண்ட்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

ஆனாலும் இந்த சீரியலை முடிக்காமல் மக்கள் மனதை கவர்ந்து ஒரு ஹிட் சீரியல் ஆகவும் இந்த ஜோடி எங்களுக்கு ரொம்பவே பிடித்தமான ஜோடி என்று ஆவலுடன் பார்த்துக் கொண்டு வந்த நீ நான் காதல் சீரியலை முடிப்பதற்கு தயாராகி விட்டார்கள். அந்த வகையில் அபி மற்றும் ராகவ் இருவரும் அவருடைய காதலை தெரியப்படுத்தி தற்போது இந்த ஜோடி சூப்பர் என்று மக்கள் கொண்டாடும் தருணத்தில் இந்த வாரத்தோடு முடிப்பதற்கு தயாராகி விட்டார்கள்.

இதற்கெல்லாம் காரணம் என்னதான் மக்கள் பாசிடிவ் விமர்சனங்களை நீ நான் காதல் சீரியலுக்கு கொடுத்தாலும் டிஆர்பி ரேட்டிங்கில் எதிர்பார்த்த புள்ளிகளை பெறவில்லை என்பதால் இந்த நாடகத்தை முடித்துவிட்டு டம்மியாக போய்க்கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலை உருட்டிக்கொண்டு வருகிறார்கள். மேலும் இந்த வரம் வெள்ளிக்கிழமையுடன் நீ நான் காதல் சீரியல் முடிய போகிறது.