சின்னத்திரை ரசிகர்களை கவரும் விதமாக விஜய் டிவி, பல கதையம்சம் கொண்ட சீரியல்களை ஒளிபரப்பு செய்து கொண்டிருக்கிறது. அதிலும் இல்லத்தரசிகளின் கஷ்டத்தை வெட்டவெளிச்சமாக்கி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு தனி ரசிகர் கூட்டம் உள்ளது.
25 வருடங்களாக கணவன் மனைவியாக வாழ்ந்து பிறகு, மூன்று பிள்ளைகள் தலைக்குமேல் வளர்ந்தும் தன்னுடைய கல்லூரி காதலி ராதிகாவை திருமணம் செய்து கொள்ள தயாராகி விட்டார் பாக்கியலட்சுமி சீரியலின் மன்மதன் கோபி.
அந்தத் திருமணத்திற்கு சமைத்துக் கொடுக்கும் சமையல் ஆர்டரை மனைவி பாக்யா எடுத்துக்கொண்டு அதை சிறப்பாக முடிக்க வேண்டும் என்ற சத்திய சோதனையில் மாட்டிக்கொண்டு தவிக்கிறார். ஆகையால் பாக்யாவிற்கு சப்போர்ட்டாகவும், பாக்கியலட்சுமி சீரியலை விருவிருப்பாக்க ஆக வேண்டும் என்பதற்காக விஜய் டிவி மகா சங்கமத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறது.
ஏற்கனவே ஒரு முறை டிஆர்பி ரேட்டிங்கில் டாப் லிஸ்டில் இருக்கும் பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் இரண்டு சீரியல்களையும் இணைத்து தூள் கிளப்பிய நிலையில், மீண்டும் அதே மாதிரி பரபரப்புடன் மகாசங்கமத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்த மகா சங்கமத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினரும் கோபியின் உறவு முறையினர் என்பதால், மகனுக்குத் திருமணம் செய்து கொடுக்கும் பொறுப்பிலிருக்கும் கோபி, இரண்டாவது திருமணம் செய்து கொண்டதை வைத்து வெளுத்து வாங்க போகின்றனர்.
அதைப்போல் அப்பாவியாக சீரியலில் கட்டப்பட்ட கொண்டிருக்கும் பாக்யாவிற்கு சப்போர்ட்டாக பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் களம் இறங்கப் போகிறது. எனவே வரும் வாரம் ஒளிபரப்பாக போகும் பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்களின் மகா சங்கமம் விறுவிறுப்புடன் இருப்பது மட்டுமல்லாமல், அடுத்த வாரம் கோபிக்கு நிச்சயம் தீபாவளி தான்.