விவாகரத்தான 5 போட்டியாளர்களை பொறுக்கி எடுத்த விஜய் டிவி.. டிஆர்பிக்காக இப்படியல்லாமா பண்ணுவீங்க!

விஜய் டிவி ஏராளமான ரியாலிட்டி ஷோ மற்றும் சின்னத்திரை தொடர்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்கள். ஆனால் தங்களது டிஆர்பிக்காக சில யுக்திகளை பயன்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதில் பெரும்பாலான நபர்கள் விவாகரத்து பெற்றவர்களாக தேர்ந்தெடுத்துள்ளனர்.

அந்த வகையில் சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் பரிச்சயமான ரக்ஷிதா மகாலட்சுமி தினேஷ் என்பவரை காதலித்த திருமணம் செய்து கொண்டார். சில காரணங்களால் இவர்கள் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். தற்போது ரக்ஷிதாவிற்கு ரூட் விட்டு வருகிறார் ராபர்ட் மாஸ்டர்.

அதாவது ராபர்ட் மாஸ்டரும் ஏற்கனவே திருமணமாகி தனது மனைவியை பிரிந்து வாழ்ந்த வருகிறார். மேலும் இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. அதன் பின்பு பிக் பாஸ் மூலம் பிரபலமான வனிதா உடன் ராபர்ட் மாஸ்டர் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாக கூறப்பட்டது. அதுவும் பாதியில் பிரேக்கப் ஆனது.

இவ்வாறு இருவரும் தங்களது பார்ட்னரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இவர்களைத் தொடர்ந்து விஜே மற்றும் சீரியல் நடிகையான மகேஸ்வரி தனது கணவனை விவாகரத்து செய்து விட்டார். இவருக்கு ஒரு மகன் உள்ளார். பிக் பாஸ் சீசன் 6 ராமுடன் மகேஸ்வரி அதிகமாக உரையாடி வருகிறார்.

மேலும் விஜய் டிவி சீரியல் நடிகர் அசீமும் தனது மனைவியை பிரிந்து வாழ்கிறார். திருமணமான சில மாதங்களிலேயே தனது மனைவியை விட்டு பிரிந்ததாகவும், தனது மகனை மட்டும் ஞாயிற்றுக்கிழமை பார்த்து வருவதாக பிக் பாஸ் வீட்டில் அசீம் கூறியிருந்தார்.

அதன் பின்பு யாரும் எதிர்பார்க்காத வண்ணம் சீரியல் நடிகை ஆயிஷாவும் விவாகரத்து பெற்றவர் தான். இவருக்கு 17 வயதிலேயே திருமணம் ஆன நிலையில் சில காரணங்களினால் மிகக் குறுகிய காலத்தில் கணவனை பிரிந்து விட்டார். இதையடுத்து சில காதல் பிரேக்கப் இவரது வாழ்க்கையில் நடந்துள்ளது.

இவ்வாறு கணவன் அல்லது மனைவியை பிரிந்த பெரும்பாலான போட்டியாளர்களை பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக விஜய் டிவி தேர்வு செய்துள்ளது. கடந்த சீசனில் கூட கணவனை இழந்த பாவனியை அமீர் ஏற்றுக்கொண்டார். விஜய் டிவி டிஆர்பியை ஏற்றுவதற்காக இவ்வாறு செய்து வருகிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →