இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் விஜய் டிவிக்கு கிடைத்த வெற்றி.. முத்துவுடன் போட்டி போடும் அண்ணன் தம்பிகள்

Vijay Tv Serial Trp Rating List: ஒரு காலத்தில் சன் டிவி சீரியல்களை மட்டுமே மக்கள் பார்த்து வந்த நிலையில் விஜய் டிவியில் உள்ள சீரியல்களும் சுவாரசியமாக இருந்ததால் மக்கள் அதிக வரவேற்பு கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். அந்த வகையில் சன் டிவி சீரியல் உடன் போட்டி போடும் விதமாக விஜய் டிவி சேனல்களும் இடம் பிடித்து விட்டது. அப்படி இந்த வாரத்தில் வெளிவந்த டிஆர்பி ரேட்டிங்கில் விஜய் டிவிக்கு கிடைத்த வெற்றி என்னவென்று பார்க்கலாம்.

எப்பொழுதுமே டிஆர்பி ரேட்டிங்கில் முதல் ஐந்து இடத்தை சன் டிவி சீரியல்கள் தான் பிடித்திருக்கும். ஆனால் இந்த வாரம் வெளிவந்த டிஆர்பி ரேட்டிங் இன் படி முதல் மூன்று இடங்களில் மட்டுமே சன் டிவி சீரியல்கள் இருக்கிறது. அடுத்து நான்கு மற்றும் ஐந்தாவது இடத்தில் விஜய் டிவி சீரியல்கள் இடம் பிடித்து விட்டது.

அந்த வகையில் விஜய் டி வியின்கதாநாயகனாக ஜொலிக்கும் முத்து நடிப்பில் வரும் சிறகடிக்கும் ஆசை சீரியல் நான்காவது இடத்தை பிடித்து விட்டது. இதற்கு அடுத்தபடியாக சிறகடிக்கும் ஆசை சீரியல் உடன் போட்டி போடும் விதமாக அண்ணன் தம்பிகளின் கதையாக வெளிவந்த அய்யனார் துணை சீரியலும் கிட்ட நெருங்கி விட்டது.

அதாவது சிறகடிக்கும் ஆசை சீரியல் 7.87 புள்ளிகளை பெற்றிருக்கிறது. இதில் கொஞ்சம் வித்தியாசத்தில் 7.62 புள்ளிகளை பெற்று அடுத்த இடத்தை அய்யனார் துணை சீரியல் வந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் 6.87 புள்ளிகளை பெற்று மூன்றாவது இடத்தில் இருக்கிறது. 6.72 புள்ளிகளைப் பெற்று சின்ன மருமகள் நான்காவது இடத்தில் இருக்கிறது.

அடுத்ததாக மக்களின் பேவரைட் சீரியலாக கொண்டாடப்படும் மகாநதி சீரியல் 5.48 புள்ளிகளை பெற்று ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. அடுத்து சிந்து பைரவி மற்றும் பாக்கியலட்சுமி சீரியல்கள் அடுத்தடுத்த இடத்தில் இருக்கிறது.