மகாநதி சீரியலில் பசுபதியை புரட்டி எடுத்த விஜய்.. வெண்ணிலாவின் சாப்டர் க்ளோஸ், காவிரிக்கு பிறந்த விடிவு காலம்

Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், பசுபதி பேச்சை கேட்டு வெண்ணிலாவின் மாமா, விஜய் மற்றும் காவிரிக்கு குடைச்சல் கொடுக்கும் விதமாக பத்திரிகையாளர்களிடம் நியாயம் கேட்டார். இதை பார்த்து கடுப்பான விஜய், வெண்ணிலாவின் மாமாவிடம் சண்டை போடுகிறார். பிறகு தாத்தா சமாதானப்படுத்தி வெண்ணிலா மற்றும் மாமாவை வீட்டுக்குள் அழைத்து பேசுகிறார்.

அப்பொழுது வெண்ணிலாவின் மாமா, உங்களுக்கும் காவிரிக்கும் நடந்தது ஒப்பந்த கல்யாணம் தானே. அந்த பொண்ணு பணம் வாங்கி தானே உங்களை கல்யாணம் பண்ணியது. இப்போ ஒப்பந்தம் முடிந்து விட்டது என்று சொல்லி வீட்டுக்கு போய் விட்டது. அந்தப் பொண்ணு நினைச்சு நீங்கள் இவ்வளவு ஃபீல் பண்றீங்க, ஆனா நீங்க தான் வேணும் என்று உங்களை மனதில் புருஷனாக நினைத்து வாழும் வெண்ணிலாவை பற்றி ஏன் யோசிக்க மாட்டீங்க என கேள்வி கேட்கிறார்.

அத்துடன் நீங்களும் வெண்ணிலாவும் சேரும் வரை இந்த வீட்டை விட்டு நாங்கள் போக மாட்டோம், உங்களை சும்மா விடவும் மாட்டோம் என்று சொல்கிறார். இதை கேட்டு ராகினி சந்தோசத்தில் சிரிக்க ஆரம்பித்து விட்டார். அப்பொழுது விஜய்க்கு புரிந்துவிட்டது, வெண்ணிலாவின் மாமாவுக்கு பின்னாடி பசுபதி தான் இருக்கிறார் என்று. அந்த வகையில் வெண்ணிலவின் மாமாவை தனியாக ரூமுக்குள் கூட்டிட்டு போயி அதட்டி யாரு உங்களை இந்த மாதிரி பேச சொன்னா என்று கேட்கிறார்.

வெண்ணிலவின் மாமா உயிருக்கு பயந்த நிலையில் பசுபதி மற்றும் ராகினி தான் என்னிடம் பேசினார்கள் என்று சொல்லி நடந்து உண்மையை உளறி விடுகிறார். இதனால் ஆத்திரமடைந்த விஜய் நேரடியாக பசுபதி வீட்டுக்கு சென்று பசுபதியை புரட்டி எடுக்கும் அளவிற்கு அடித்து சண்டை போட்டு உன்னுடைய பொண்ணு சம்பந்தமே இல்லாமல் என் வீட்டில் தான் தங்குகிறாள்.

உன்னுடைய பொண்ணு எந்த நோக்கத்தில் கல்யாணம் பண்ணி வந்தா என்ற விஷயத்தை நான் பத்திரிக்கையாளர்களிடம் சொன்னால் உங்களுடைய நிலைமை என்ன ஆகும் என்று யோசித்துப் பார்த்தியா என்று சண்டை போட்டு அவமானப்படுத்திவிட்டு விஜய் அங்கிருந்து கிளம்பி விடுகிறார். இதனால் கோபமான பசுபதி, வெண்ணிலாவுக்கும் விஜய்க்கும் கல்யாணம் பண்ணி வைக்கும் விதமாக சூழ்ச்சி பண்ண போகிறார்.

ஆனால் இதோடு இந்த விஷயத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று முடிவு பண்ண போகும் விஜய், வெண்ணிலாவின் சாப்டரை க்ளோஸ் பண்ணும் விதமாக விஜய் காவிரியின் காதல் மற்றும் அவர்களுடைய அன்பு என்னவென்று புரிய வைத்துவிட்டு வெண்ணிலாவின் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்து விடுவார். அத்துடன் காவிரி கர்ப்பம் என்ற உண்மை வெண்ணிலாவுக்கு தெரிய வரும் பொழுது நிச்சயம் விஜய் வாழ்க்கையை விட்டுவிட்டு போய்விடுவார்.