Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், மீனா இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் பொழுது மற்றவர்களுக்கு உதவி பண்ணுவதை பார்த்த கான்ஸ்டபிள் மனசு மாறிவிட்டது. அதனால் முத்துவை போலீஸ், கோர்ட்டுக்கு கூட்டிட்டு போகும் பொழுது கான்ஸ்டபிள் உண்மையை சொல்லும் விதமாக காரில் பிரேக் ஒயர் கட் ஆகியிருந்தது.
அதை சர்வீஸ் பண்ண எடுத்துட்டு போகும் போது தான் என்னுடைய கையும் உடைந்து விட்டது. அந்த வகையில் முத்து சொன்னபடி உண்மையிலேயே அந்த கார் பிரேக் பிடிக்கவில்லை என்று சொல்கிறார். உடனே போலீஸ் இவ்வளோ நேரம் சொல்லாமல் ஏன் அமைதியாக இருந்தாய் என்று கேட்கிறார். அதற்கு அந்த கான்ஸ்டபிள், நான் எல்லா உண்மையும் அருணிடம் வந்து சொல்லிவிட்டேன்.
ஆனால் அவர் யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று சொல்லி என் வாயை அடைத்து விட்டார். ஆனால் தற்போது இந்த பொண்ணு மீனா செய்த உதவியை பார்க்கும்போது என் மனசு கேட்கவில்லை. அதுதான் உண்மையை சொல்லிவிட்டேன் என்று சொல்கிறார். உடனே போலீஸ், அருணை திட்டி விட்டு முத்துவை போக சொல்லி விடுகிறார். முத்துவுக்கு மீனா செய்த உதவியாள் பிரச்சனையிலிருந்து மாட்டாமல் வீட்டிற்கு வந்து விட்டார்.
வந்ததும் போலீஸ் ஸ்டேஷனில் நடந்த விஷயத்தை எல்லோரிடமும் சொல்கிறார். அப்படி சொன்னதும் என்னுடைய காரில் பிரேக் ஒயர் கட் பண்ண வேண்டும் என்றால் கார் சாவி இருந்தால் மட்டும்தான் முடியும். அந்த வகையில் வெளியில இருப்பவருக்கு யாரோ நம் வீட்டில் இருப்பவர்கள் தான் சாவியை கொடுத்து உதவி செய்திருக்கிறார். அது யாருன்னு மட்டும் நான் கண்டுபிடிக்கணும் என்று சொல்கிறார்.
உடனே விஜயா, நீ என்ன சந்தேகப்படுகிறாயா?? எனக்கு உன் மீது கோபம் இருக்க தான் செய்கிறது. அதற்காக யாராவது பெத்த பிள்ளைக்கு விபத்து ஆகணும் என்று நினைப்பார்களா? நான் அப்படிப்பட்டவளா இல்லை என்று சொல்லியதும் முத்துவின் கண் கலங்கிவிட்டது. இதற்கு முத்துவும் நீங்கள் டென்ஷன் ஆக வேண்டாம் உங்கள் மீது எனக்கு சந்தேகம் இல்லை.
நீங்கள் என்னுடைய அம்மா, எப்போதுமே அப்படி யோசிக்க மாட்டீங்க என்று எனக்கு தெரியும் என்று இரண்டு பேரும் செண்டிமெண்டாக பேசுவதை பார்க்கும் பொழுது உண்மையிலேயே கண் கலங்கி விட்டது. அடுத்ததாக முத்து, மனோஜை பார்க்கிறார். மனோஜ் எனக்கு எந்த அவசியமும் இல்லை உன்னுடைய கார் சாவியை எடுத்துக் கொடுப்பதற்கு என்று சொல்கிறார்.
இதை கேட்டதும் முத்து, இந்த விஷயத்தை செய்வதற்கு ரொம்பவே தைரியம் வேண்டும். அந்த தைரியம் உனக்கு இல்லை என்று எனக்கு தெரியும். அதனால் உன் மீது எனக்கு சந்தேகம் இல்லை என்று சொல்லிவிட்டு எதார்த்தமாக ரோகிணியை பார்க்கிறார். ஆனால் ரோகிணி முந்திரிக்கொட்டை மாதிரி முந்திக்கொண்டு என் மீது சந்தேகப்படுகிறீர்களா?
ஏற்கனவே அத்தை என் மீது கோபத்தில் இருப்பதால் அவர்களை எப்படி நான் சமாதானம் செய்வது என்று தெரியாமல் இருக்கிறேன். இந்த சமயத்தில் நான் எதற்கு அணியில் மாட்டி இருந்த சாவியை எடுத்துக் கொடுக்கணும் என்று சொல்கிறார். உடனே முத்து, சாவி ஆணியில் தான் மாட்டிற்கு என்று நான் சொல்லவே இல்லையே என்று கேள்வி கேட்கிறார்.
அதற்கு ரோகிணி எப்போதுமே ஆணியில் தானே சாவி இருக்கும், அதை தான் சொன்னேன் என்று சொல்லி சமாளித்து விடுகிறார். அடுத்ததாக ரோகிணி, வித்யாவிடம் ஒரு லட்ச ரூபாய் பணத்தை வாங்கிக் கொண்டு லோக்கல் ரவுடி சிட்டியை பார்க்கப் போகிறார். அங்கே போனதும் அவரிடம் ஒரு லட்ச ரூபாய் பணத்தை கொடுத்து விட்டு நகை வாங்கி விடுகிறார்.
அந்த நகையை கழுத்தில் போட்டு விஜயாவிடம் கொடுக்க கிளம்பி விட்டார். ஆனால் சிட்டி ஒன்றும் அந்த அளவுக்கு உத்தமன் இல்லை, அதனால் ரோகினி இடம் கொடுக்கும் பொழுது போலியான நகை தான் கொடுத்திருப்பார். இது தெரியாத ரோகிணி அந்த நகையை எடுத்துட்டு போயி விஜயாவிடம் கொடுத்து விடுவார். விஜயாவும் நகைக்கு ஆசைப்பட்டு வாங்கிக் கொண்ட பொழுது அதை எதார்த்தமாக கடையில் செக் பண்ண போவார்.
அப்பொழுதுதான் அது போலியான நகை என்று தெரிந்து விஜயா அவமானப்பட போகிறார். அந்த கோபத்தையும் ரோகினிடம் விஜயா வந்து காட்டுவார். கடைசியில் வீட்டிலேயும் திட்டு வாங்கிக் கொண்டு, சிட்டி இடமும் ஏமாந்து போய் நிற்கப் போகிறார்.