முத்து மீனாவிடம் தஞ்சமடைந்த விஜயா.. க்ரிஷ் மூலம் வெளிவரப் போகும் ரோகிணியின் ரகசியம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், க்ரிஷ் இருப்பது ரோகினிக்கு பிடிக்கவில்லை என்று முத்து மீனா நினைக்கிறார்கள். மாமியாருக்கு ஜால்ரா அடிக்கும் விதமாக ரோகிணி இந்த மாதிரி பண்ணுகிறார் என்று தவறாக புரிந்து கொண்டார்கள். ஆனால் ரோகிணி பொருத்தவரை க்ரிஷ் இருப்பது பிரச்சினை இல்லை, ஆனால் க்ரிஷ் மூலம் மாட்டிக்கொள்ளுவோமோ என்ற பயம் தான் இருக்கிறது.

அதனால் தான் எப்படியாவது கிருஷை ,அம்மாவிடம் அனுப்பி வைக்க வேண்டும் என்று ரோகினி நினைக்கிறார். இந்த சூழ்நிலையில் க்ரிஷ் முத்து வீட்டில் இருப்பவர்களிடம் ஜாலியாக டான்ஸ் ஆடி சந்தோசமாக இருந்து கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் பரதநாட்டிய பள்ளிக்கூடத்தில் ரதி என்னும் பெண் கர்ப்பமான விஷயம் தெரிந்த பெண் வீட்டார்கள் விஜயா வீட்டுக்கு வந்து பிரச்சினை பண்ண ஆரம்பித்து விட்டார்கள்.

அதிலும் ஒரு நபர், விஜயாவை அடிப்பதற்கு தயாராகி விட்டார். பிறகு மீனாவும் முத்துவும் தான் விஜயாவுக்கு சப்போர்ட் பண்ணும் விதமாக அந்த கும்பல் இடம் பேசி வெளியே அனுப்பி வைத்தார்கள். ஆனாலும் விஜயா பயப்பட ஆரம்பித்து விட்டார். இதனால் எல்லாரும் விஜயாவுக்கு சப்போர்ட் பண்ணும் விதமாக பேசிய நிலையில் சுருதி பயம் காட்டி பேசி விடுகிறார்.

பிறகு முத்து எனக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை, என் உயிரை கொடுத்தாவது அம்மாவுக்கு எதுவும் ஆகாதப்படி நான் பார்த்துக் கொள்வேன். அதனால் இந்த பிரச்சனையும் நான் சரி செய்து விடுகிறேன் என்று சொல்கிறார். இதனால் விஜயா கொஞ்சம் தைரியமாக இருக்க ஆரம்பித்து விட்டார். பிறகு கிருஷை கூட்டிட்டு பாட்டியிடம் கூட்டிட்டு போய் காட்ட வேண்டும் என்று முத்துமீனா கிளம்புகிறார்கள்.

ஆனால் விஜயா பயந்து போய் இருப்பதால் முத்துமீனா எங்கேயும் போகக்கூடாது என் கூடவே இருக்கணும் என்று வீட்டிலேயே இருக்க சொல்கிறார். ஆனாலும் கிருஷை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போக வேண்டும் என்று சொன்னதால் விஜயா, ரோகினியை கூப்பிட்டு நீ சும்மா தானே இருக்க இவனை கூட்டிட்டு போயிட்டு வா என்று ரோகினி இடம் அனுப்பி வைக்கிறார்.

உடனே ரோகிணி, கிருஷை கூட்டிட்டு அம்மாவை பார்ப்பதற்கு ஹாஸ்பிடலுக்கு போய் விடுகிறார். அங்கே போனதும் ரோகிணியின் அம்மா, க்ரிஷ் இந்த மாதிரி குடும்பத்தில் இருப்பவர்களுடன் சேர்ந்து வளர்ந்தால் தான் அவனுக்கும் சந்தோசம்.

எப்படியும் அந்த குடும்பத்தில் தானே அவன் இருக்க வேண்டும் அதனால் இப்பொழுது அவன் அங்கிருந்து பழகட்டும் என்று சொல்கிறார். உடனே ரோகிணிக்கும் வேறு வழி இல்லாததால் கிருஷை வீட்டுக்கு கூட்டிட்டு போய்விடுகிறார். அதனால் க்ரிஷ் மூலம் கூடிய சீக்கிரத்தில் ரோகிணியின் ரகசியம் அனைத்தும் வெளிவர போகிறது.