பேய்க்கும் பேய்க்கும் சண்டை, ரோகிணி VS விஜயா.. ஊரே வேடிக்கை பார்க்க போகுது

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், ரோகிணி ஏமாற்றியதற்கு பெருசாக எந்த தண்டனையும் கிடைக்கவில்லை என்று பார்ப்பவர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக இருந்தது. ஆனால் தற்போது வரும் காட்சிகளை பார்க்கும் பொழுது பேய்க்கும் பேய்க்கும் சண்டை ஆரம்பமாகிவிட்டது. இனி ஊரே வேடிக்கை பார்க்க போகிறது என்பதற்கேற்ப சுவாரசியமாக இருக்கப் போகிறது.

அதாவது பண பேராசையில் இருக்கும் விஜயாவைப் பொறுத்தவரை மனோஜ் மட்டும் நல்லபடியாக இருக்க வேண்டும் என்று ஒரு நப்பாசை. அதனால் தான் பணக்கார வீட்டு மருமகள் என்றதும் ரோகிணி பற்றி எந்த விஷயத்தையும் விசாரிக்காமல் கல்யாணத்தை பண்ணி வைத்து விட்டார். பிறகு ரோகிணி பணக்கார வீட்டு பொண்ணு இல்லை என்று தெரிந்ததும் மனோஜையும் ரோகினையும் பேசவிடாமல் பிரித்து விட்டார்.

தற்போது அடுத்த கட்டமாக ஒரேடியாக மனோஜ் வாழ்க்கையில் இருந்து ரோகினியை விரட்ட வேண்டும் என்று முடிவு பண்ணிய விஜயா, பார்வதி வீட்டிற்கு வந்து மந்திரவாதி மூலம் ரோகிணியையும் மனோஜையும் ஒரேடியாக பிரித்து மனோஜ்க்கு பணக்கார வீட்டு பொண்ண பார்த்து கல்யாணம் பண்ணி வைக்க வேண்டும் என்று பிளான் பண்ணி விட்டார்.

இதை தெரிந்து கொண்ட ரோகிணி, எனக்கா ஆப்பு வைக்கப் போகிறாய், உனக்கு வைக்கிறான் பாரு பெரிய ஆப்பு என்று பார்வதியிடம் மந்திரவாதி நம்பரை வாங்கிட்டு போயி விஜயாவையும் மனோஜையும் பிரிப்பதற்கு சதி செய்யப் போகிறார். இதுதான் பேய்க்கும் பேய்க்கும் சண்டை ஆரம்பம் என்று சொல்வார்கள். விஜயா வாழ்க்கையில் எடுத்த உருப்படியான விஷயம் ரோகிணி புத்தியை தெரிந்து கொண்டது தான்.

ஆனால் இதற்கே இப்படி என்றால் இன்னும் ரோகினிக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி ஒரு குழந்தை இருக்கிறது என தெரிந்து விட்டால் ரோகிணி சாப்டர் க்ளோஸ் தான். ஆனால் இந்த விஜயாவும் லேஸ் பட்டவங்க இல்லை. மீனாவையும் முத்துவையும் படாதபாடு படுத்தி வருகிறார். அப்படிப்பட்ட விஜயாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ரோகிணி, செய்யப் போகும் சம்பவம் தான் தரமாக இருக்கப் போகிறது.

மனோஜ் மட்டும் தான் என்னுடைய பையன் என்று தலையில் தூக்கி வைத்து ஆடும் விஜயாவுக்கு ரோகிணி வைக்கப் போகும் ஆப்பு என்னவென்றால் மனோஜ், அம்மாவுக்கு குட் பாய் சொல்லிவிட்டு முழுமையாக பொண்டாட்டி பேச்சைக் கேட்கும் அளவிற்கு ரோகினியை சுற்றி சுற்றி வரப் போகிறார். இதன் பிறகுதான் விஜயாவுக்கு பாசம்னா என்ன உறவுனா என்ன என்பது புரியப் போகிறது.