SA Chandrasekhar Movie Actress: சினிமாவில் கவர்ச்சியை காட்டினால் தான் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்கும் என நடிகைகள் சிலர் கண்மூடித்தனமாக நம்புகின்றனர். இதனால் பிக் பாஸ் மூலம் பிரபலமான நடிகை ஒருவர் சோசியல் மீடியாவில் இளசுகள் சொல்லு விடும் அளவுக்கு கவர்ச்சி தூக்கலான புகைப்படத்தை பதிவிட்டு வாய்ப்பு தேடிக் கொண்டிருக்கிறார்.
நடிகை சாக்ஷி பிக் பாஸ் சீசன் 3 போட்டியாளராக கலந்து கொண்டு அதன்பின் தமிழ் சினிமாவில் காலா, விஸ்வாசம், ராஜா ராணி, டெடி உள்ளிட்ட படங்களில் சிறுசிறு கதாபாத்திரத்தில் நடித்த பின்பு ராய் லட்சுமி நடித்த சிண்ட்ரெல்லா படத்தில் வில்லியாக நடித்து மிரட்டி விட்டார்.
இவர் தமிழில் மட்டுமல்லாமல் கன்னடம், மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடிக்க தொடங்கினார். இதுவரை இவருக்கு கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டிருந்த சாக்ஷி இப்போது அவர் காட்டிய கவர்ச்சியால் ஹீரோயின் வாய்ப்பை பெற்றுள்ளார்.
விஜய்யின் அப்பா இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘நான் கடவுள் இல்லை’ என்ற படத்தில் சாக்ஷி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து அவருடைய சினிமா கேரியருக்கு விதை போட்டார். அன்று போட்ட விதை இப்போது அடுத்ததாக அவரை அடுத்ததாக கவர்ச்சி தூக்கலான கேரக்டரில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.
‘என் எதிரே ரெண்டு பாப்பா’ என்ற அடல்ட் ஹாரர் காமெடி படத்தில் சாக்ஷி கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தில் பிரபல வில்லன் நடிகரான ரியாஸ் கானின் மகனும் பிக் பாஸ் பிரபலமான ஷாரிக் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
இதில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக சாக்ஷி நடித்தது மட்டுமின்றி ஷாரிக்குடன் லிப் லாக் படுக்கையறை காட்சிகளில் நடித்துள்ளார். இந்த படத்தில் இடம்பெற்ற காட்சிகளை ஷாரிக்- சாக்ஷி இருவரும் இணையத்தில் வெளியிட்டு பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளனர்.