வீரா சீரியலில் விஜி செய்த சூழ்ச்சி.. வீட்டுக்கு திரும்ப வந்த மாறன்

Veera Serial: ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகின்ற வீரா சீரியலில், ராமச்சந்திரன் குடும்பத்தில் இருப்பவர்களை பழி வாங்க வேண்டும் என்று விஜி ஒவ்வொரு பிளான் போட்டு வருகிறார். ஆனால் விஜி என்ன பிளான் போட்டாலும் அதை தடுக்கும்படி வீரமாறன் காய் நகர்த்தி வருகிறார்கள். அதனால் இவர்கள் இருக்கும் வரை நாம் போட்ட பிளான் எதுவும் நிறைவேறாது என்று விஜிக்கு தெரிந்து விட்டது.

இதனால் விஜி யாருக்கும் தெரியாமல் வீராவும் மாறனும் அந்த குடிசையில் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது அதில் நெருப்பை போட்டு விடுகிறார். இதனால் குடிசை முழுவதும் பத்தி எரியும் பொழுது வடிவு பார்த்து கத்துகிறார். உடனே மாறன் முழித்து வீராவை காப்பாற்றி வெளியே கூட்டிட்டு வந்து விடுகிறார்.

அத்துடன் ராமச்சந்திரன் குடும்பத்தில் இருப்பவர்களும் வெளியே வந்து குடிசையில் எரியும் தீயை அணைக்க முயற்சி எடுக்கிறார்கள். அப்பொழுது வீரா மறுபடியும் அந்த குடிசைக்குள் நுழைந்து ஒரு பெட்டியை தூக்கிட்டு வருகிறார். உடனே எல்லோரும் இப்படி நெருப்பு எரியும் பொழுது ஏன் உள்ளே போனாய்.

அப்படி என்ன இருக்கிறது இந்த பெட்டியில் என்று கேட்க ஆரம்பித்து விட்டார்கள். அதற்கு வீரா, அந்தப் பெட்டியில் மாறன் அம்மாவுடன் இருக்கும் போட்டோ இருப்பதை சொல்லி அதற்காகத்தான் நான் உள்ளே போயிட்டு எடுத்து வந்தேன் என கூறுகிறார்.

மேலும் இப்பொழுது அந்த குடிசையில் தங்க முடியாது என்று சொல்லி மாறனும் வீராவும் அங்கிருந்து கிளம்பி விட்டார்கள். யார் சொல்லியும் கேட்காத இவர்கள் போவதை பார்த்து ராமச்சந்திரனுக்கு நெஞ்சுவலி வந்துவிடுகிறது. உடனே ராமச்சந்திரனை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய் விடுகிறார்கள்.

அங்கே ராமச்சந்திரனை பார்த்து பேசிய வீராவிடம் ராமச்சந்திரன் கேட்டது என்னவென்றால் நீங்கள் என்னுடைய பக்கத்தில் இருக்கும் பொழுது தான் எனக்கு பக்க பலமாக இருக்கும். அதனால் எப்போதுமே நீங்கள் எங்களை விட்டு எங்கேயும் போகக்கூடாது என்று சத்தியம் பண்ண சொல்கிறார்.

வீராவும் மாமாவின் உடல் ஆரோக்கியத்திற்காக சத்தியம் செய்து ராமச்சந்திரன் வீட்டுக்குள்ளேயே மறுபடியும் வீராவும் மாறனும் நுழைந்து விடுகிறார்கள். இனி தான் விஜியின் ஆட்டத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக வீரா களம் இறங்கப் போகிறார்.