Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், பாண்டியன் ஏற்பாடு பண்ண கல்யாணம் நடக்குமா? அல்லது குமரவேலு போட்ட திட்டத்தில் அரசி சிக்கிக் கொள்வாரா என்ற பல கேள்விகளுடன் தற்போது கதைகள் நகர்ந்து வருகிறது. ஆனால் இதில் யாரும் எதிர்பார்க்காத சில திருப்பங்கள் காத்துக் கொண்டிருக்கிறது.
அதாவது அரசி மற்றும் சதீஷ்க்கு நிச்சயதார்த்தம் பாண்டியன் வீட்டில் நடைபெற்று வருகிறது. இதில் டான்ஸ் பாட்டு என்று கோலாகலமாக ஆரம்பித்த நிச்சயதார்த்தத்தில் சுகன்யாவால் ஒரு பிரச்சனை வருகிறது. அதாவது எல்லோரும் ஆடி சந்தோஷமாக இருக்கும் பட்சத்தில் சுகன்யாவுக்கு குமரவேல் போன் பண்ணுகிறார்.
சுகன்யாவுக்கு போன் வருகிறது என்று தெரிந்த அரசி, நிச்சயம் குமரவேலுவாகத் தான் இருப்பான் என்று புரிந்து கொண்டார். அதனால் சுகன்யா யாரிடம் பேசுகிறார் என்ன பிரச்சினையாக போகிறது என்ற பயத்தாலேயே அரசி பதட்டத்துடன் இருக்கிறார்.
அந்த வகையில் குமரவேலு, சுகன்யாவிடம் நான் அரசிடம் பேச வேண்டும் என்று சொல்லி போனை கொடுக்க சொல்கிறார். நிச்சயதார்த்தம் முடிந்தவுடன் அரசி தனியாக இருப்பதை தெரிந்து கொண்ட சுகன்யா, குமரவேலுவிடம் பேச சொல்லி போனை கொடுக்கிறார்.
அப்பொழுது குமரவேலு நீ என்னை ஏமாற்றி வேறொரு கல்யாணம் பண்ணப் போகிறாய். அதனால் நிச்சயம் என்னை பார்த்து நீ மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையென்றால் என்னிடம் இருக்கும் புகைப்படத்தை எல்லோருக்கும் தெரியும் படி நோட்டீஸ் போட்டு ஒட்டி விடுவேன் என்று மிரட்டுகிறார்.
உடனே அரசி, உன்னுடைய கெட்ட புத்தி தெரியாமல் உன்னிடம் பேசி பழகியதை நினைத்து நான் ரொம்பவே வெட்கப்படுகிறேன் என்று சொல்கிறார். அதற்கு குமரவேலு இப்போ இதெல்லாம் பேசி ஒன்றும் ஆகப்போவதில்லை. இன்னைக்கு நான் சொல்ற இடத்துக்கு வர வேண்டும் என்று சொல்லி போனை வைக்கிறார்.
இந்த விஷயத்தை சுகன்யாவிடம் அரசி சொல்லிய பொழுது சுகன்யா ஒரு மன்னிப்பு தானே கேட்டுட்டு வா என்று யாருக்கும் தெரியாமல் கூட்டிட்டு போவதற்கு முயற்சி எடுக்கிறார். அந்த வகையில் அரசியை வீட்டில் இருந்து சுகன்யா அனுப்பி வைத்து விடுவார். முட்டாள்தனமாக யாரிடமும் சொல்லாமல் போன அரசி, குமரவேலு விரித்த வலையில் சிக்கிக் கொள்ளப் போகிறார்.
இதனை தொடர்ந்து அரசி சதீஷ் கல்யாணம் நிற்கப் போகிறது, ஏனென்றால் அரசி கழுத்தில் குமரவேலு தான் தாலி கட்டி கூட்டிட்டு வரப்போகிறார். இதை எதிர்பார்க்காத பாண்டியன் மற்றும் குடும்பம் அவமானப்பட்டு நிற்கப் போகிறார்கள்.
அத்துடன் இனி என்னுடைய மகளை இல்லை என்று பாண்டியன் தலை முழுகப் போகிறார். கடைசியில் அரசி குமரவேலுவிடம் மாட்டிக் கொண்டு ஒவ்வொரு நாளும் சித்திரவதை படப்போகிறார்.