விஜய் டிவியின் ஃபேவரிட் சீரியலை ஓரம் கட்டிய ஜீ தமிழ் சீரியல்.. மாஸ் காட்டும் கார்த்திக்

Vijay tv and Zee tamil Serial: சீரியல் மூலம் மக்களை கவர்ந்து வருவதால் டிஆர்பி ரேட்டிங்கில் யார் கெத்து என்பதை நிரூபிக்கும் வகையில் சில சேனல்கள் போட்டி போட்டு வருகிறது. இதில் முதலிடத்தில் சன் டிவி இருந்தாலும் இரண்டாவது மூன்றாவது இடத்தில் விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் உள்ள சீரியல்கள் மக்களை கவர்ந்து வருகிறது.

அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் முதல் ஐந்து இடத்தை பிடித்த சீரியல் எதுவென்றால் சிறகடிக்கும் ஆசை, அய்யனார் துணை, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2, மகாநதி மற்றும் பாக்கியலட்சுமி சீரியல். இந்த சீரியல்கள் தான் தொடர்ந்து விஜய் டிவியின் முதல் ஐந்து இடத்தை தக்க வைத்திருக்கிறது.

ஆனால் தற்போது இதில் சில மாற்றங்கள் ஏற்படும் வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களும் உள்ளே புகுந்து இருக்கிறது. அந்த வகையில் விஜய் டிவியின் ஃபேவரிட் சீரியல் என்று மக்களால் கொண்டாடப்படும் மகாநதி சீரியலையே ஓரம் கட்டும் அளவிற்கு ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியல் அதிக புள்ளிகள் பெற்றிருக்கிறது.

மகாநதி சீரியல் 5.26 புள்ளிகளை பெற்று விஜய் டிவியில் நான்காவது இடத்தை பிடித்திருக்கிறது. ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் 5.78 புள்ளிகளை பெற்று முதல் இடத்தில் இருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் மாஸ் ஆக்ஷனில் கலக்கி வரும் கார்த்திக் நடிப்பு மக்களை அதிக அளவில் கவர்ந்ததால் தொடர்ந்து பேராதரவு கொடுத்து வருகிறார்கள்.