வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

எங்க தலைவன எதும் சொல்லகூடாதுனு கமலிடம் சொல்லுங்க.. பிக் பாஸ்க்கு வந்த மிரட்டல்

விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி துவங்கப்பட்டு இன்றுடன் ஒரு வாரத்தை நிறைவு செய்திருக்கிறது. எனவே வார இறுதி நாட்களில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமலஹாசன், அந்த வாரம் முழுவதும் போட்டியாளர்கள் என்ன செய்தார்கள் என்பதை கனிவுடன் பேசுவது மட்டுமல்லாமல் தவறு செய்திருந்தால் அவர்களை மிரட்டியும் விடுவார்.

இந்த நிகழ்ச்சியின் முதல் நாளிலேயே ஜிபி முத்து தன்னுடைய வெகுளித்தனமான பேச்சால் அனைவரையும் இம்ப்ரஸ் செய்து விட்டார். அதுவும் ஆதாம் பற்றி பேசிய ஆண்டவரிடம் ஆதாமா, எங்க இருக்காரு என்று அவர் கேட்டது செம ரகளை.

Also Read: ஆட்டத்தை நாசுக்காக ஆரம்பிக்கும் ஆண்டவர்.. கவுண்டர் போட்டு கலாய்த்த ஜி பி முத்து

அதைத்தொடர்ந்து தற்போது வெளியாகி உள்ள ப்ரோமோவிலும் அவரின் அட்ராசிட்டி தொடர்ந்து கொண்டிருக்கிறது. எனவே இந்த சீசனில் ஜிபி முத்துவுக்கு என்றே அவருடைய ரசிகர்கள் ஆர்மியை தொடங்கி அவனின் வீடியோக்களை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

அதுமட்டுமின்றி விஜய் டிவியின் டிஆர்பி ஏற வேண்டும் என்றால் ‘எங்க தலைவனா வச்சு தான் பிக்பாஸ் நிகழ்ச்சியே ஓடுது. இதனால், அவரையே வின்னராக்கிடுங்க. எங்க தலைவன எதும் சொல்லகூடாதுனு கமலிடம் சொல்லுங்க’ என்று பிக்பாஸ்க்குமிரட்டல் விடுக்கின்றனர்.

Also Read: தரமான போட்டியாளரை இறக்கிய விஜய் டிவி.. பிக்பாஸிலும் துவங்கிய சக்களத்திச் சண்டை

‘சும்மா ஜிபி முத்து வச்சியே காமெடி பண்ணிட்டு இருக்காங்க, வேற ஏத்தாச்சு புதுசா டிரை பண்ணுங்க’ என்றும், ‘பாவம் நம்மவர். இந்த பிக் பாஸ் 6ல் இருந்து கமல் தான் வெளியே போவார் போல’ என பிக்பாஸ் ரசிகர்கள் இந்த சீசனை குறித்து கருத்து தெரிவிக்கின்றனர்.

மேலும் ஜிபி முத்து வைத்துதான் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை ஹிட் செய்யவேண்டும் என விஜய் டிவி தெளிவாக இருக்கிறது. இதனால் லீக் ஆட்டங்கங்களில் தோற்று இறுதிசுற்றுக்கான தகுதியை CSK அணி இழந்தால் எப்படி ஆட்டத்தின் விறுவிறுப்பு குறையுமோ அதுபோல ஜிபி முத்து இருக்கும் வரை குறைவிருக்காது என்றும் நினைக்கின்றனர்.

Also Read: கமலுடன் போட்டி போடும் ஜி பி முத்து.. டாப் ஹீரோயின்களுக்கு போடும் ஸ்கெட்ச்

Trending News