புதன்கிழமை, ஜனவரி 15, 2025

படப்பிடிப்பில் நடந்த இறப்பு.. ராசி இல்ல என முத்திரை குத்தி அஜித்தை ஒதுக்கிய சினிமா

நடிகர் அஜித்திற்கு முதல் திரைப்படம் அமராவதி என்றுதான் நாம் இதுநாள்வரை நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால் அந்தப் படத்திற்கு முன்பே அவர் ஒரு தெலுங்கு திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். அதன் பிறகுதான் அவருக்கு தமிழில் அமராவதி திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அவர் முதலில் நடித்த தெலுங்கு திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது எதிர்பாராத ஒரு அசம்பாவிதம் நடந்து இருக்கிறது. அந்தப் படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சிக்காக ஆற்றில் கேமராவை வைத்து ஷூட்டிங் எடுக்கப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த படத்தின் இயக்குனர் ஆற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்திற்கு பிறகு அந்த இயக்குனரின் அப்பாவே அந்த படத்தை எடுத்து முடித்திருக்கிறார். இப்படி பல தடங்கல்களுக்கு பிறகு அந்தப் படம் வெளியானது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு படம் ஓடவில்லை. அதனால் அஜித்தை தெலுங்கு திரையுலகம் ராசியில்லாத நடிகர் என்று ஒதுக்கி தெலுங்கு சினிமாவை விட்டு துரத்தியது.

அதன் பிறகுதான் அவர் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். அமராவதி திரைப்படத்தின் மூலம் கவனிக்கப்பட்ட நடிகராக இருந்த அஜித், அதன் பின்னர் ஆசை, காதல் கோட்டை போன்ற திரைப்படங்களின் மூலம் சிறிது சிறிதாக முன்னேறினார்.

அதுவரை காதல் நாயகனாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த அஜித், தீனா படத்தின் மூலம் ஆக்சன் ஹீரோவாகவும் உருவெடுத்தார். இந்தப் படம்தான் அவருக்கு ஏராளமான ரசிகர்களை கொடுத்தது. அதன் பின்னர் தான் அவர் ரசிகர்களால் தல என்று அழைக்கப்பட்டார்.

இப்படி எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் தன்னுடைய திறமையால் கஷ்டப்பட்டு முன்னேறிய அவர் இன்று தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். எந்த தெலுங்கு சினிமா அவரை வேண்டாம் என்று ஒதுக்கியதோ அந்தத் சினிமாதான் இன்று அவரின் கால்ஷீட்டுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. இதுதான் அவருக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று அவருடைய ரசிகர்கள் பெருமைப்பட்டு வருகின்றனர்.

Trending News