Manoj Bharathiraja: சமீபகாலமாக மாரடைப்பால் பிரபலங்கள் உயிரிழக்கும் செய்தி அதிகமாகிக் கொண்டிருக்கிறது. அவ்வாறு திடீரென இந்த மண்ணுலகை விட்டு பிரிந்த பிரபலங்களை இப்போது பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் முக்கியமான நபராக பார்க்கப்பட்டவர் டிபி கஜேந்திரன். இவருக்கு சிறுநீரகக் கோளாறு அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது. இந்த சூழலில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.
கேவி ஆனந்த் ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்து வந்த நிலையில் மாரடைப்பால் தனது 51வது வயதில் உயிரிழந்தார்.
சின்ன கலைவாணர் என்று அழைக்கப்படும் விவேக் மரணம் திடீரென ஏற்பட்டது. மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் பலனளிக்காமல் 59 வயதில் விவேக் உயிரிழந்தார்.
நகைச்சுவை நடிகர் மயில்சாமி சிவராத்திரி திருவிழாவில் கலந்துகொண்டு வீடு திரும்பினார். அப்போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். அப்போது இவரது வயது 57 ஆகும்.
மாரடைப்பால் உயிரிழந்த பத்து பிரபலங்கள்
வேட்டையாடு விளையாடு படத்தின் மூலம் வில்லதனத்தை காட்டியவர் தான் டேனியல் பாலாஜி. 48வது வயதில் மாரடைப்பு காரணமாக அவரது உயர் பிரிந்தது.
எதிர்நீச்சல் தொடர் மூலம் மிகவும் பிரபலமடைந்தவர் மாரிமுத்து. திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மாரிமுத்து இறந்தது சினிமா துறையில் மிக பெரிய அதிர்ச்சியை கொடுத்திருந்தது. அப்போது அவருக்கு வயது 57.
கன்னட நடிகரான சிரஞ்சீவி ஷர்ஜா மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். கன்னட சினிமாவில் இது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. தன்னுடைய 35 வயதிலேயே மாரடைப்பால் இறந்தார்.
கன்னட சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் புனீத் ராஜ்குமார். இவர் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த நிலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அப்போது அவருக்கு வயது 46 ஆகும்.
கண்ணா லட்டு திங்க ஆசையா படத்தில் நடித்தவர் தான் சேதுராமன். இவர் நடிகர் மட்டுமல்ல மருத்துவர். இவர் 2020 ஆம் ஆண்டு தனது 35 வது வயதில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
பாரதிராஜாவின் மகன் மனோஜ் 48 வயதில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவர் உயிரிழப்பதற்கு சிறிது காலம் முன்பு தான் இருதய அறுவை சிகிச்சை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.