சூர்யா 44 படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். அந்தமானில் இந்த படத்தின் சூட்டிங் நடந்து வருகிறது. ஏற்கனவே சூர்யா நடித்து கொண்டிருக்கும் கங்குவா. இந்த படம் 90 சதவீதம் முடிந்துவிட்டது. இன்னும் அதில் பேட்ச் ஒர்க் மற்றும் வி எஃப் எக்ஸ் வேலைகள் மீதம் இருக்கிறது.
ஏற்கனவே கார்த்திக் சுப்புராஜ் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திற்கு பின் ஒரு வருடமாக கதை ரெடி பண்ணி வந்தார். இப்பொழுது அந்த கதை சூர்யாக்கு பிடித்துப் போய்விட்டதால் பச்சைக்கொடி காட்டி விட்டார். இந்த படத்திற்கு ஆர்டிஸ்ட் தேடும் வேளையில் இறங்கி உள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.
சூர்யா போடப் போகும் அடிதடி
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் கொடூர வில்லனாக நடித்தவர் சட்டாணி. யானைகளை கொன்று தந்தங்களை கடத்தும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார், முகம் தெரியாத இந்த நடிகர். இவர் பெயர் மட்டும் தான் இந்த படத்தில் அனைவருக்கும் தெரியும், ஆளை தெளிவாக காட்டி இருக்க மாட்டார்கள்.
இப்பொழுது இவரை விட்டுக் கொடுக்காமல் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் சூர்யா 44 படத்திற்கு வில்லனாக கமிட் செய்திருக்கிறார். அதுமட்டுமின்றி கார்த்திக் சுப்புராஜின் உறவினர் இந்த படத்தில் முக்கியமான வில்லன்களில் ஒருவராக நடிக்கிறார்.
கார்த்திக் சந்தானம் இவர் கார்த்திக் சுப்புராஜுக்கு தம்பி முறை ஆவார், அவருடைய ஸ்டோன் பெஞ்ச் தயாரிப்பு நிறுவனத்தில் இவர் தான் ஆல் இன் ஆல். இப்பொழுது இவருக்கு நடிக்கும் ஆசை வந்துவிட்டது. அதனால் இந்த படத்தில் வில்லனாக களம் இறங்குகிறார் கார்த்திக் சந்தானம்.
- ஒரே நாளில் கங்குவாவுடன் மோதும் விடாமுயற்சி
- சூர்யாவுக்கு வில்லனாகும் அமுல் பேபி மூஞ்சி
- Suriya 44 : சூர்யாவுடன் ஜோடி போடும் 6 அடி விஜய் பட நடிகை