சனிக்கிழமை, ஜனவரி 25, 2025

மாச கணக்கில் காத்து கிடந்த லோகேஷ்.. கூலாக டாட்டா காட்டிய தளபதி

நடிகர் விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து முடித்திருக்கிறார். சமீபத்தில் கூட வாரிசு படத்திற்கான இசைவெளியீட்டு விழா கூட மிக பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. இந்த படத்தின் வேலைகள் நடந்து கொண்டிருக்கும் போதே விஜய்யின் 67 வது படத்திற்கான அறிவிப்புகள் வெளியாகின. மாஸ்டர் பட வெற்றியை தொடர்ந்து விஜய், லோகேஷ் கனகராஜுக்கு அடுத்த பட வாய்ப்பை கொடுத்திருக்கிறார்.

லோகேஷ் கனகராஜை பொறுத்தவரை தன்னுடைய ஒவ்வொரு படத்திற்கும் ரொம்பவே மெனக்கெடுப்பவர் என்பது அனைவரும் அறிந்ததே. மேலும் விக்ரம் பட வெற்றிக்கு பிறகு இவர் மீது ரொம்பவே எதிர்பார்ப்பு அதிகமாகி இருக்கிறது. எனவே லோகேஷ் கனகராஜ் இந்த படத்திற்காக ரொம்பவே கடின உழைப்பை போட்டு வருகிறார்.

Also Read: வாரிசு, துணிவை விட இந்த படங்களுக்கு தான் எதிர்பார்ப்பு ஜாஸ்தியா.. 2023-னின் ஆரம்பத்திலேயே ரணகளமாகும் இணையதளம்

முழுக்க முழுக்க கேங்ஸ்டர் கதையை மையமாக கொண்டு எடுக்கப்படுகிறது. இந்த படத்திற்காக மொத்தம் 7 வில்லன்கள் களம் இறங்க உள்ளனர். இதுவரை சஞ்சய் தத், கௌதம் மேனன், நடிகர் விஷால் ஆகியோர் விஜய்க்கு வில்லனாக இதுவரை உறுதி செய்யப்பட்டு இருக்கின்றனர். படத்திற்காக இதுவரை சென்னை, காஷ்மீர், வெளிநாடு போன்ற மூன்று இடங்களில் சூட்டிங் நடக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது.

அதன்படி படத்தின் முதல் கட்ட சூட்டிங்கை சென்னையில் நடத்த திட்டமிட்டுள்ளனர். லோகேஷ் கனகராஜ் இந்த படத்திற்காக பயங்கரமாக ஸ்கெட்ச் போட்டு வைத்திருக்கிறார். அவருடைய திட்டப்படி ஜனவரி 2 ஆம் தேதி சூட்டிங் ஆரம்பமாகிறது. லோகேஷ் கனகராஜ் முதல் நாள் பிளானில் நடிகர் விஜய்யை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார்.

Also Read: ரஜினியை பின்பற்றி வளர்ந்து வரும் விஜய், அஜித்.. வசமாக மாட்டிக் கொண்ட வாரிசு, துணிவு பட பிரமோஷன்

அந்த திட்டத்தில் தான் இப்போது மண்ணை அள்ளி போட்டுவிட்டார் நடிகர் விஜய். வாரிசு படத்தின் வேலைகளை பக்காவாக முடித்து கொடுத்த தளபதி விஜய், படத்தின் ப்ரமோஷனாக இசை வெளியீட்டு விழாவையும் கச்சிதமாக முடித்து விட்டார். ஆனால் ஆடியோ லாஞ்ச் முடிந்த கையோடு குடும்பத்தோடு லண்டனுக்கு பறந்து விட்டார் விஜய்.

லண்டனுக்கு சென்ற விஜய் ஜனவரி மூன்றாம் தேதி தான் சென்னை திரும்புகிறார். இதனால் அவரால் முதல் நாள் சூட்டிங்கில் கலந்து கொள்ள முடியாது. விஜய்யின் இந்த திடீர் முடிவால் ரொம்பவே அப்செட்டில் இருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இப்போது விஜய் இல்லாமலேயே தளபதி 67 படத்தில் முதல் சூட்டிங் நடக்கவிருக்கிறதாம்.

Also Read: சுய லாபத்திற்காக விஜய் கூட்டிய கூட்டம்.. தனி பாதையை உருவாக்கும் சூர்யாவை பார்த்து கத்துக்கோங்க

Trending News