தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களங்களைக் கொண்ட படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், ராதிகா சரத்குமார் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான ‘தாய் கிழவி’ படமும் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது.
நகைச்சுவை மற்றும் உணர்ச்சிகரமான காட்சிகள் கலந்த இப்படம், தியேட்டர்கள் மட்டுமின்றி ஓடிடியிலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
சிவகார்த்திகேயன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவான இப்படம், கோவாவில் நடைபெறவுள்ள 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் Indian Panorama 2026 பிரிவில் திரையிடத் தேர்வாகியுள்ளது.
இந்தியன் பனோரமா பிரிவில் இடம்பெறுவதற்காக 404 திரைப்படங்கள் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், தேர்வு செய்யப்பட்ட 20 படங்களில் ஒன்றாக ‘தாய் கிழவி’ இடம்பிடித்துள்ளது. இது படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வரும் நவம்பர் 20 முதல் 28 வரை கோவாவில் நடைபெறவுள்ள இந்த விழாவில், பல்வேறு மொழிகள் மற்றும் நாடுகளைச் சேர்ந்த திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. இவ்விழாவில் ‘தாய் கிழவி’ திரைப்படமும் இடம்பெற்றிருப்பது தமிழ் சினிமாவிற்குப் பெருமை சேர்த்துள்ளது.




