ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

ரியல் கேங்ஸ்டர் லுக்கில் அலப்பறையுடன் வெளிவந்த தலைவர் 171 போஸ்டர்.. இணையத்தில் காட்டுத் தீயாய் பரவும் டைட்டில்

Thalaivar 171 Poster: தலைவர் 171 படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கனவு படம் என்று தான் சொல்ல வேண்டும். கடந்த இரண்டு வருடங்களாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் எப்படியாவது நடித்து விட வேண்டும் என பல கட்ட பேச்சு வார்த்தைகளை நடத்தி, தற்போது அந்த ப்ராஜெக்ட்டை உறுதிப்படுத்தி விட்டார் ரஜினி. இப்போது இந்த படத்தை பற்றிய பேச்சுக்கள் தான் சமூக வலைத்தளத்தில் ஆக்கிரமித்து உள்ளன.

லோகேஷ் கனகராஜுக்கு திரும்பிய பக்கமெல்லாம் அதிர்ஷ்டம் என்பது போல், தளபதி விஜய் நடிப்பில் இவர் இயக்கிய லியோ படம் அடுத்த மாதம் ரிலீஸ் இருக்கு காத்திருக்கிறது அதற்குள் தலைவர் 171 படத்தின் அறிவிப்பு வெளியாகி பயங்கர வைரலாகி கொண்டு இருக்கிறது. தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களை அடுத்தடுத்து இயக்கி இப்போது இவர் டாப் ஒன் இயக்குனர் ஆகிவிட்டார்.

Also Read: கோடியில் கொட்டி கொடுத்தாலும் படம் பண்றது இல்ல.. ஹீரோவின் சங்கார்த்தமே வேணாம் என ஒதுங்கிய மாறன்

லியோ படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் முடிந்த கையோடு, தலைவர் 171 படத்திற்கான ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகளை லோகேஷ் கனகராஜ் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மேலும் கிட்டத்தட்ட 30 வருடங்களுக்குப் பிறகு இந்த படத்தின் மூலம் மம்முட்டி, ரஜினியுடன் இணைந்து நடிப்பதாக சொல்லப்படுகிறது. தற்போது அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

லோகேஷ் கனகராஜ் படத்தை பொருத்தவரைக்கும் படத்தின் அறிவிப்பு மற்றும், பர்ஸ்ட் போஸ்டர்களின் மீது ரசிகர்களுக்கு எப்போதுமே அதிக எதிர்பார்ப்பு இருக்கும். அந்த வகையில் தலைவர் 171 படத்திற்கான போஸ்டர் ஒன்று சமூக வலைத்தளங்களில் காட்டுத் தீ போல் பரவி வருகிறது. இந்த போஸ்டரில் ரஜினி வெள்ளை முடி, தாடி, மீசையுடன் ரியல் கேங்ஸ்டர் லுக்கில் இருக்கிறார்.

                                      இணையத்தில் வைரல் ஆகி கொண்டிருக்கும் தலைவர் 171 போஸ்டர்

Thalaivar 171
Thalaivar 171

கருப்பு நிற சட்டை அணிந்து இருக்கும் ரஜினியின் பேக்ரவுண்டில் முழுக்க காட்டு தீ போன்று இருக்கிறது. மேலும் இந்த படத்தின் பெயர் தி டிவில் என்று அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும் இயக்கம் லோகேஷ் கனகராஜ், இசை அனிருத், தயாரிப்பு சன் பிக்சர்ஸ் நிறுவனம் என மற்ற தகவல்களும் இருக்கும் இந்த போஸ்டர் தான் இப்போது வைரலாகி கொண்டு இருக்கிறது.

இந்த போஸ்டர் பட குழுவால் வெளியிடப்படவில்லை. ரஜினியின் ரசிகர்கள் உருவாக்கியது தான் இது. இனி படத்தின் அதிகாரப்பூர்வ போஸ்டர் வெளியாகும் வரை இது போன்ற அட்ரஸிட்டிகள் தினமும் சமூக வலைத்தளத்தில் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கும். தலைவர் 171 படத்தின் அதிகாரப்பூர்வ போஸ்டரை பட குழு அடுத்த ஆண்டு பொங்கல் அன்று ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருக்கிறது.

Also Read: ரஜினி, லோகேஷுக்கு கொடுக்கும் தலைவலி.. சன் பிக்சர்ஸ்-சை விட இவர் தொல்லை தாங்க முடியல

Trending News