வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

யாருப்பா அடுத்த சூப்பர் ஸ்டார்.? விஜய்யையும் , எஸ்.ஏ.சி-யையும் வச்சி செய்த ஜெயிலர் பட ஹூக்கும் பாடல்

Super Star Rajinikanth- Humkum Song: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெய்லர் திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் நேற்று வெளியானதில் இருந்து சமூக வலைத்தளத்தில் ரஜினி ரசிகர்கள் பட்டாசுகளை கொளுத்தி போட்டுக் கொண்டிருக்கின்றனர். எப்பவும் போல ரஜினியின் அறிமுக பாடல் என்று இந்த பாடலை நினைத்து விட முடியாது, பாடலின் ஒவ்வொரு வரிகளிலும் ரஜினி கொடுக்க வேண்டிய அத்தனை பதிலடியையும் மொத்தமாய் சேர்த்து கொடுத்திருக்கிறார்.

ரஜினிகாந்த்திற்கு தர்பார் மற்றும் அண்ணாத்தே போன்ற திரைப்படங்கள் அடுத்தடுத்து தோல்வியாக அமைந்துவிட, அவருடைய சூப்பர் ஸ்டார் பட்டம் ஆட்டம் கண்டு விட்டதாக சமீப காலமாக பலரும் பேசி வந்தனர். ரஜினியின் சம்பளம் குறைந்து கொண்டே போவதாகவும், விஜய்யின் சம்பளம் 150 கோடியை நெருங்கிக் கொண்டிருப்பதாகவும் கூட செய்திகள் வெளியாகின. தற்போது இந்த சூப்பர் ஸ்டார் சர்ச்சைக்கு பாடலின் மூலம் பதிலடி கொடுத்துவிட்டார் ரஜினி.

Also Read:ரஜினியை மீண்டும் மீண்டும் வம்புக்கு இழுக்கும் ப்ளூ சட்டை.. வடிவேலு காமெடியை வைத்து பண்ணும் அலப்பறை

பேர தூக்க நாலு பேரு.. பட்டத்த பறிக்க நூறு பேரு.. குட்டி செவுத்த எட்டி பார்த்தா உசிரு கொடுக்க கோடி பேரு” என்ற வரிகள் அடுத்து தளபதி விஜய் தான் சூப்பர் ஸ்டார் என்று புரளியை கிளப்பிக்கொண்டு சுற்றிக் கொண்டிருந்த பிரபலங்களுக்கும், ரசிகர்களுக்கும் அதே நேரத்தில் மௌனம் காத்துக் கொண்டிருந்த விஜய்க்கும் பதில் சொல்லும் விதமாக அமைந்திருப்பதாக சொல்லப்படுகிறது.

“உன் அலும்ப பார்த்தவன்.. உங்க அப்பன் விசில கேட்டவன்.. உன் மவனும், பேரனும் ஆட்டம் போட வைப்பவன்.. என்ற வரிகள் கண்டிப்பாக இது விஜய் மற்றும் அவருடைய அப்பா எஸ் ஏ சந்திரசேகரை தான் குறிக்கிறது என சொல்லப்படுகிறது. SAC இயக்குனராக ரஜினியின் மீது எவ்வளவு மரியாதை வைத்திருந்தாரோ, அவருடைய மகன் விஜய் நடிக்க வந்த பிறகு அது அப்படியே மாறிவிட்டது. பாபா ரிலீஸ் சமயத்தில் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கிளப்பிவிட்டது இவர்தான் என்று கூட சொல்வார்கள்.

Also Read:சூப்பர் ஸ்டார் பெயர தூக்க போட்டி போட நினைக்கும் நாலு பேரு இவர்கள் தான்.. ஹுக்கும் பாடலால் வெடிக்கும் சர்ச்சை

சமீப காலமாக நிறைய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகும்போது அவர்களின் நேரில் அழைத்து பாராட்டும் ரஜினிகாந்த், விஜய் படங்களை தவிர்த்து வந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் சந்திரமுகி ரிலீஸ் சமயத்தில் எப்படி காத்திருந்து சர்ச்சைக்கு பதிலடி கொடுத்தாரோ, அதேபோன்று தற்போது சூப்பர் ஸ்டார் நாற்காலிக்கு போட்டி போட்டுக் கொண்டிருக்கும் சமயத்தில் ஜெயிலர் பட பாடலின் மூலமே அத்தனை பேரின் வாயையும் அடைத்து விட்டார்.

லியோ படத்தின் நான் ரெடி தான் வரவா பாடல், அதே ஜெயிலர் படத்தில் முதலில் வெளியான காவாலா பாடல் என அத்தனையும் தூக்கி சாப்பிட்டு விட்டது இந்த ஹூக்கும் பாடல். இந்தப் பாடலின் மூலம் ரஜினிகாந்தின் சூப்பர் ஸ்டார் இமேஜை மீண்டும் தூக்கி நிறுத்தி விட்டார்கள் பட குழுவினர்.

Also Read:பேர தூக்க நாலு பேரு, பட்டத்த பறிக்க நூறு பேரு.. லியோவுக்கு பதிலடி கொடுத்த முத்துவேல் பாண்டியன்

Trending News