Thalaivar 171: திறமை இருந்தால் வயது ஒரு தடையே இல்லை என்பதற்கேற்ப நிற்காமல் சூப்பர் ஸ்டார் ரஜினி தொடர்ந்து நடித்துக் கொண்டே வருகிறார். தற்போது டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முக்கால்வாசி முடிந்த நிலையில் அக்டோபர் மாதத்தில் அனைத்து திரையரங்களிலும் வெளிவர இருக்கிறது.
இதற்கிடையில் தலைவர் 171 படத்தை லோகேஷ் உடன் கமிட் செய்து விட்டார். அந்த வகையில் லோகேஷ் இப்படத்திற்கான ஆர்டிஸ்ட்களை தேடும் முயற்சியில் இறங்கி இருக்கிறார். ஏற்கனவே இதில் முக்கியமான கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் ராகவாவை கம்மிட் பண்ணி விட்டார்கள்.
தற்போது இவர்களை தொடர்ந்து இன்னொரு முக்கிய நடிகரை நடிக்க வைப்பதற்கு லோகேஷ் பிளான் போட்டுவிட்டார். ஆனால் அந்த நடிகருக்கும் ரஜினிக்கும் கிட்டத்தட்ட 40 வருடம் பகை இருக்கிறது. இதையெல்லாம் தெரிந்தும் லோகேஷ் தலைவர் 171 படத்தில் அந்த நடிகரை சிக்க வைத்து விட்டார்.
தலைவர் 171 இல் அட்டகாசமாக அமையப்போகும் காம்போ
அந்த நடிகர் வேறு யாருமில்லை லொள்ளு மன்னன் சத்யராஜ் தான். ஆமாம் இவருக்கும் ரஜினிக்கும் 1984 ஆம் ஆண்டு தம்பிக்கு எந்த ஊரு படப்பிடிப்பின் போது மனக்கசப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதனை தொடர்ந்து மிஸ்டர் பாரத் படத்திலும் சத்யராஜ் மிகவும் அவமானப்பட்டு இருக்கிறார்.
அதையெல்லாம் தீர்க்கும் வகையாக காவேரி பிரச்சினையில் ரஜினிக்கு எதிராக சத்யராஜ் கொந்தளித்து பேசினார். இப்படி ஒரு பக்கம் இவர்களுடைய பகை தீராமல் வளர்ந்து கொண்டே வந்தது. தற்போது இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தலைவர் 171 படத்தில் இரண்டு பேரும் இணையப் போகிறார்கள்.
இதைப் பற்றி சத்யராஜ் இடம் லோகேஷ் கேட்டதற்கு எனக்கு ஒன்னும் நடிப்பதற்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் ஒரே ஒரு கண்டிஷன் ரஜினிக்கு பஞ்ச் டயலாக் இருப்பது போல் எனக்கும் வேண்டும் என்று கேட்டிருக்கிறார். அதற்கு லோகேஷும் டபுள் சம்மதத்தை கொடுத்து வந்திருக்கிறார்.
இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கம் பல வருடத்திற்கு பின் மறுபடியும் சத்யராஜ் மற்றும் ரஜினியின் காம்போவை பார்ப்பதற்கு ஒரு சான்ஸ் லோகேஷ் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். கண்டிப்பாக இவர்களுடைய காம்போ ரசிகர்களை குஷிப்படுத்தும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.