ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

தளபதி 66 ரிலீஸ் தேதியை லாக் செய்த படக்குழு.. வசூல் ராஜாவின் அடுத்த டார்கெட்

பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து விஜய் தற்போது தளபதி 66 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க இயக்குனர் வம்சி இயக்குகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல் முறையாக பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார்.

கடந்த மாதம் இப்படத்திற்கான பூஜை போடப்பட்டு தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் படுவேகமாக நடந்து வருகிறது. மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவாகும் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார் நடித்து வருகிறார். மேலும் பிரபல நடிகர் ஷ்யாம், விஜய்க்கு சகோதரராக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்தப் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக நடிகர் பிரபுவும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். இது குறித்த தகவலை தற்போது படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் விறுவிறுப்பாக நடந்து வரும் இந்த படத்தின் அறிவிப்பு தேதியையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

அதன்படி இந்தத் திரைப்படம் அடுத்த வருடம் அதாவது 2023 ஆம் ஆண்டு பொங்கலன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் விஜய்யின் ரசிகர்கள் தற்போது மிகுந்த கொண்டாட்டத்தில் இருக்கின்றனர். இதுவரை விஜய்யின் நடிப்பில் பொங்கல் ட்ரீட்டாக வெளியான பல திரைப்படங்கள் வெற்றி வாகை சூடி இருக்கிறது.

அந்த வகையில் போக்கிரி, மாஸ்டர் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதன் அடிப்படையில் தற்போது வெளியாக உள்ள தளபதி 66 திரைப்படமும் பல கோடி வசூலை வாரிக் குவிக்கும் என்று விஜய்யின் ரசிகர்கள் ஆர்ப்பரித்து வருகின்றனர்.

சமீபத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படம் நல்ல வசூலைப் பெற்றாலும், விமர்சன ரீதியாக பல சிக்கல்களை சந்தித்தது. அதனால் இயக்குனர் வம்சி தற்போது உருவாகிக்கொண்டிருக்கும் தளபதி சிக்ஸ்டி சிக்ஸ் திரைப்படத்தை வெகு கவனமாக இயக்கி வருவதாக கூறப்படுகிறது. முழுக்க முழுக்க சென்டிமென்ட் கலந்த இந்த திரைப்படம் அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Trending News