வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

தெலுங்கு ரசிகர்களை கவர பலே திட்டம்.. தாறுமாறான கூட்டணியில் தளபதி 66

தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபைலி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் தளபதி 66. இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு, சங்கீதா மற்றும் பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து முடிந்துள்ளது.

தளபதி 66 படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வருகிறது. சமீபகாலமாக வெளியாகும் பான் இந்திய மொழி திரைப்படங்களில் அனைத்து மொழிகளிலும் பிரபலமான நடிகர்களை ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்த வருகின்றனர். ஏனென்றால் எல்லா மொழி ரசிகர்களையும் கவர வேண்டும் என்பதற்காக இதுபோன்ற செய்து வருகிறார்கள்.

பெரும்பாலும் சத்யராஜ் மற்றும் நாசர் இருவரும் பான் இந்திய மொழி படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் தெலுங்கு ரசிகர்களை கவர்வதற்காக தளபதி 66 படத்தில் தெலுங்கில் முன்னணி நடிகர் ஒருவரை தேர்வு செய்துள்ளனர்.

அதாவது மகேஷ்பாபு தளபதி 66 படத்தில் இணைந்துள்ளார். விஜய் மற்றும் மகேஷ்பாபு இருவருமே நல்ல நண்பர்களாக பழகி வருகின்றனர். இந்நிலையில் தளபதி 66 படத்தில் இடம்பெறும் கதாபாத்திரங்களை மகேஷ் பாபு அறிமுகம் செய்து வைக்கிறார் என்று கூறப்படுகிறது.

மகேஷ்பாபு சென்னையில் வளர்ந்தவர் என்பதால் தமிழில் சரளமாக பேசக்கூடியவர். இவர் நடிப்பில் வெளியான ஸ்பைடர் படத்தில் தமிழ் வசனங்களை மகேஷ் பாபுவே பேசியிருந்தார். இதனால் மகேஷ் பாபுவிற்கு தமிழிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களை கவர வேண்டும் என்ற யோசனையில் இப்படத்தில் மகேஷ் பாபுவை இணைந்துள்ளார்கள். மேலும் இப்படத்தில் மகேஷ்பாபு கவுரவ தோற்றத்தில் வரவும் அதிக வாய்ப்பு உள்ளது. வருகின்ற ஜூன் 22ஆம் தேதி தளபதி 67 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியாகயுள்ளது.

Trending News