திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

வசூல் மன்னனை பின்னுக்கு தள்ளிய ஏகே.. தளபதி 67, ஏகே 62 படங்களில் அஜித், விஜய்யின் சம்பளம்

பொதுவாக டாப் நடிகர்களின் சம்பளமும், படத்தின் பட்ஜெட்டும் கிட்டத்தட்ட சரிசமமாக உள்ளது. ஏனென்றால் பெரிய ஹீரோக்கள் வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு படங்களில் மட்டுமே கமிட்டாகி கொள்கிறார்கள். இதனால் ஒரு படத்திற்கு கிட்டத்தட்ட 100 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்கள்.

அதுவும் தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் விஜய் மற்றும் அஜித்தின் சம்பளம் தான் அதிகமாக உள்ளது. எப்போதுமே பாக்ஸ் ஆபீஸ் கிங் ஆக வளம் வந்து கொண்டிருந்த விஜய் தான் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களில் முதல் இடத்தில் இருந்தார். ஆனால் சமீபத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படங்கள் மோதிக்கொண்டது.

Also Read : 24 ஆவது ஆண்டு அடி எடுத்து வைத்த சூப்பர் ஹிட் படம்.. விஜய் சினிமா கேரியரில் ஏற்பட்ட திருப்புமுனை

இதனால் விஜய்யின் பிசினஸ் சற்று சரிந்துள்ளது. இதுவரை வசூல் மன்னனாக வளம் வந்த விஜய், லோகேஷ் உடன் இணைந்த தளபதி 67 படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் தயாரிக்கிறார். தளபதி 67 படத்தில் நடிப்பதற்கு விஜய்க்கு 80 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாம்.

மேலும் துணிவு படத்தின் வெற்றிக்குப் பிறகு அஜித்தின் சம்பளம் உயர்ந்துள்ளது. அதன்படி போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த துணிவு படத்திற்கு கிட்டத்தட்ட 70 கோடியில் இருந்து 80 கோடி வரை அஜித் சம்பளம் பெற்றிருந்தார். அடுத்ததாக லைக்கா உடன் கைகோர்த்து ஏகே 62 படத்தின் நடிக்கவிருக்கிறார்.

Also Read : விஜயின் ஆசையை நிறைவேற்றாத ஆர்.ஜே. பாலாஜி.. மீண்டும் வாய்ப்பு கொடுத்த விஜய்

இந்த படத்தை தற்போது மகிழ்திருமேனி இயக்க உள்ளதாக தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளது. ஏகே 62 படத்திற்கு லைக்கா நிறுவனம் அஜித்திற்கு 90 கோடி சம்பளம் கொடுக்க உள்ளதாம். இதனால் விஜய்யின் சம்பளத்தை காட்டிலும் 10 கோடி அதிகமாக அஜித் ஏகே 62 படத்திற்கு வாங்குகிறார்.

இந்த செய்தி பிரபல நாளிதழ் ஒன்றில் வெளியாகி உள்ளதால் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் இடையே தற்போது கடுமையான வாக்குவாதங்கள் நடந்து வருகிறது. ஏனென்றால் வாரிசு படத்தின் போதே விஜய் 100 கோடியை தாண்டி சம்பளம் பெற்றுள்ளார் என அவரது ரசிகர்கள் கூறிவருகிறார்கள்.

Also Read : விஜய்யின் ஃபர்ஸ்ட் லுக், டைட்டில் ரிலீசுக்கு முன்பே கல்லா கட்ட தொடங்கிய தளபதி 67.. லோகேஷ் மேல் அவ்ளோ நம்பிக்கை

Trending News