திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

தளபதி 67 பட பூஜைக்கு வந்த முக்கிய 2 இயக்குனர்கள்.. அடுத்த பட கூட்டணிக்கு போட்ட அடித்தளம்

நேற்று விஜய் நடிக்கும் தளபதி 67 படத்திற்கான படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கப்பட்டது. அப்போது கலந்து கொண்ட பிரபலங்களை குறித்து தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பேசப்படுகிறது. தளபதி 67 படத்தின் பூஜையில் விஜய்யுடன் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், த்ரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜுன், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

அதிலும் தளபதி 67 லோகேஷ் இயக்கும் படத்திற்கான பூஜை வீடியோ போட்டோக்கள் சமீபத்தில் வெளிவந்தன. இந்த நிகழ்ச்சியில் இரண்டு முக்கிய இயக்குனர்கள் கலந்து கொண்டு, விஜய் நடிக்கும் அடுத்த இரண்டு பட கூட்டணிகளுக்கு அடித்தளம் போட்டுள்ளனர். தளபதி 67 பட பூஜையில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால் இரண்டு இயக்குனர்கள் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் புஷ்கர் காயத்ரி இருவரும் வந்து இருந்தனர்.

Also Read: நயன்தாரா, திரிஷா இடத்தை உடைக்க வரும் அடுத்த நடிகை.. ரீ-எண்ட்ரி கொடுக்க போட்ட பழைய திட்டம்

இதில் கார்த்திக் சுப்புராஜ் லோகேஷ் கனகராஜ் நண்பர் அவர்களின் அழைப்பில் வந்திருக்க வாய்ப்பு. ஆனால் விக்ரம் வேதா படத்தை இயக்கி மிகப்பெரிய ஹிட் கொடுத்த புஷ்கர் காயத்ரி எதற்காக வந்தார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை விஜய்யின் அடுத்த படத்தின் இயக்குனர்கள் புஷ்கர் காயத்ரி ஆக அல்லது கார்த்திக் சுப்புராஜ் ஆக இருக்க வாய்ப்பு.

முக்கியமாக விஜய் படத்திற்கு இந்த மாதிரி பெரிய இயக்குனர்கள் குறைவாகத்தான் வருவார்கள். அதனால் இந்த செய்தி பரவி வருகிறது. மேலும் தளபதி 67 படத்திற்கு பிறகு விஜய் அடுத்ததாக இயக்குனர் அட்லி உடன் தளபதி 68 படத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியானது.

Also Read: பிரம்மாண்டமாக நடந்த தளபதி 67 பூஜை.. சில நிமிடங்களிலேயே லட்சத்தைக் கடந்த வைரல் வீடியோ

ஆனால் அஜித்தின் ஏகே 63 படத்தை அட்லி இயக்குவதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகையால் தளபதி 68 படத்தை இயக்குனர் அட்லி இயக்கும் பட்சத்தில், அடுத்ததாக தளபதி 69 படத்தை புஷ்கர் காயத்ரி இயக்குவார் என்று சொல்லப்படுகிறது. ஏனென்றால் புஷ்கர் காயத்ரி ஏற்கனவே பேட்டி ஒன்றில் விஜய்யுடன் படம் பண்ண விருப்பம் என தெரிவித்திருந்தார்.

மேலும் இந்த நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தளபதி 70 படத்தை இயக்கவும் அதிக வாய்ப்பு இருக்கிறது என பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது. அதுமட்டுமின்றி ஆர் ஜே பாலாஜி இடமும் விஜய் ஒரு கதையை கேட்டு ரெடி பண்ண சொல்லி இருக்கிறார். இதனால் கூடிய விரைவிலேயே விஜய் அடுத்தடுத்து நடிக்கும் படத்தில் ஹாட் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: ஆடியோ உரிமம் மட்டும் இத்தனை கோடி பிசினஸா.? தளபதி 67 இப்பவே கண்ண கட்டுதே

Trending News