திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

தளபதி 68 விஜய்யுடன் மோத உள்ள சைக்கோ வில்லன்.. வெங்கட் பிரபுவின் தரமான செலக்சன்

விஜய் தன் லியோ படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் தற்பொழுது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தில் கமிட்டாகி உள்ளார். இது மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை முன் வைக்கும் விதமாக இருந்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் சைக்கோ வில்லன் இடம் பெறுவது மேலும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

வெங்கட் பிரபுவின் கஸ்டடி படம் வெளிவந்த நிலையில் அவரின் அடுத்த படத்தை விஜய்யை வைத்து இயக்கப் போவதாக பரபரப்பு தகவல் வெளிவந்தது. இப்பேச்சுவார்த்தை தற்போது விஜய்யின் ஒப்புதலுக்கு இணங்க முடிவுக்கு வந்துள்ளது. இதைத்தொடர்ந்து அவரின் ஒரு லைன் ஸ்டோரியை கேட்டு விஜய் நடிக்க ஒப்புக் கொண்டது வெங்கட் பிரபுவுக்கு மிக பெரும் பெருமையாக இருக்கிறது.

Also Read: சிம்புவுக்கு ஜோடியான வாரிசு நடிகை.. பக்கா காம்பினேஷனில் தயாராகும் படம்

மேலும் பல எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் இப்படம் குறித்து தற்பொழுது வெளியாகி உள்ள தகவல்கள் கூடுதல் ஆர்வத்தை தூண்டி வருகிறது. தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனராக இருந்து அதன்பின் நடிகராக களம் இறங்கியவர் தான் எஸ் ஜே சூர்யா. 2017ல் இவர் வில்லனாக நடித்து மாபெரும் வெற்றியை பெற்ற படம் தான் ஸ்பைடர்.

இதில் சைக்கோ வில்லனாக இடம் பெற்ற இவர் மக்களிடையே நல்ல விமர்சனத்தை பெற்றார். அதன் பின் 2021ல் வெளிவந்த மாநாடு படத்தில் இவரின் டயலாக் பெரிதளவு பேச வைத்தது. மேலும் தற்பொழுது விஜய்க்கு டஃப் கொடுக்கும் வில்லனாக தளபதி 68ல் களம் இறங்குகிறார் எஸ் ஜே சூர்யா.

Also Read: நா அவ்ளோ சேடிஸ்ட் இல்ல, மீடியாவில் விளக்கம் கொடுத்த லோகேஷ்.. லியோ-வில் உள்ள அல்டிமேட் சீன்

ஏஜிஎஸ் என்டர்டைன்மெண்ட்ஸ் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளது. இவர்கள் விஜய்யின் பிகில் படத்தை அடுத்து இப்படத்தை மேற்கொண்டு இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பல சஸ்பென்ஸ்களை உருவாக்கி வரும் இப்படத்தில் கீர்த்தி செட்டி ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

அந்த வகையில் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக 19 வயதே ஆன ஹீரோயின் நடிக்க உள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் இப்படத்தில் எஸ் ஜே சூர்யாவின் வில்லன் கதாபாத்திரத்திற்கு வெங்கட் பிரபு எவ்வாறு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். இத்தகைய கூட்டணியில் உருவாக இருக்கும் இப்படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

Also Read: ஒட்டு மொத்த கவனத்தைப் பெற்ற மாணவன்.. விஜய் செய்த செயல்

Trending News