Thalapathy 68 Title Poster: லியோ படத்தை முடித்த கையோடு விஜய் தளபதி 68 படத்தில் பிஸியாகி இருக்கிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, மீனாட்சி சவுத்ரி, லைலா என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.
இதுதான் மிகப்பெரும் எதிர்பார்ப்புக்கு காரணமாக இருக்கிறது. மேலும் விஜய் இப்படத்தில் இரு வேடங்களில் நடிக்க உள்ளார். அதில் ஒன்று மிகவும் இளமையான கதாபாத்திரம். அதற்காக சில டெக்னாலஜியையும் படகுழு பயன்படுத்தி இருக்கின்றனர்.
இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே படத்திற்கு Goat என்ற தலைப்பு வைக்கப்பட உள்ளதாக சோசியல் மீடியாவில் செய்திகள் பரவியது.
Also read: விஜய் 68 இல் நாலஞ்சு எக்ஸ்ட்ரா பிட்டுகளை சேர்த்து போட்ட விஜய்.. வசமாக சிக்கி கொண்ட வெங்கட் பிரபு
ஆனால் தயாரிப்பாளர் அதை திட்டவட்டமாக மறுத்தார். ஆனாலும் ரசிகர்கள் பேன் மேட் போஸ்டரை வெளியிட்டு அதகளம் செய்து வந்தனர். இந்நிலையில் புத்தாண்டு சர்ப்ரைஸாக தளபதி 68 பட அப்டேட் தாறுமாறாக வெளிவந்துள்ளது.
அதன்படி பலரும் யூகித்த Goat (The Greatest Of All Time) என்ற டைட்டில் தான் படத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இரண்டு விஜய் கைகோர்த்து இருக்கும் அந்த போஸ்டரில் கவனம் ஈர்க்கும் பல விஷயங்கள் இருக்கிறது. ஏற்கனவே இது டைம் ட்ராவல் என்று சொல்லப்பட்ட நிலையில் போஸ்டரும் அதை உறுதிப்படுத்தி இருக்கிறது.
Also read: விஜய்யை பத்தி பேசாதீங்க..! விஜயகாந்த் இறப்பிற்கு பின் கொந்தளித்த பிரபலம்
அதன்படி வயதான விஜய் மற்றும் மிகவும் இளமையான விஜய் என போஸ்டர் பயங்கர கலக்கலாக இருக்கிறது. இதற்காகவே காத்திருந்த தளபதியின் ரசிகர்கள் தற்போது புத்தாண்டை இந்த போஸ்டரோடு கொண்டாடி வருகின்றனர்.