திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

லியோவை ஓவர் டேக் செய்ய வரும் தளபதி 69.. 900 கோடி பட்ஜெட்டுடன் களமிறங்கும் டீம்

விஜய் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் பரபரப்புடன் நடித்து வருகிறார். தற்போது காஷ்மீரில் இருக்கும் படக்குழு பயங்கர உற்சாகத்துடன் படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் இப்படம் தொடர்பாக வெளிவரும் அடுத்தடுத்த அப்டேட்டுகளும் ரசிகர்களை கொண்டாட வைத்து வருகிறது.

இதைத்தொடர்ந்து விஜய்யின் அடுத்தடுத்த திரைப்படங்கள் குறித்த செய்திகளும் சோசியல் மீடியாவை கலக்கிக் கொண்டிருக்கிறது. அதன்படி தளபதி 68 திரைப்படத்தை அட்லி இயக்கப் போகிறார் என்பது உறுதியாகி இருக்கிறது. தற்போது ஷாருக்கானை வைத்து ஜவான் திரைப்படத்தை இயக்கி வரும் அட்லி அப்படத்தில் விஜய்யை ஒரு கேமியா ரோலில் நடிக்க வைக்க பேசியிருக்கிறார்.

Also read: டாடா, லியோ என கலக்கும் இரட்டை குழந்தைகளின் புகைப்படம்.. வாரிசுகளை களம் இறக்கிய பிரபல காமெடியன்

விஜய்யும் அதற்கு சம்மதம் தெரிவித்து விட்டாராம். ஏனென்றால் அடுத்ததாக அட்லி, விஜய் கூட்டணியில் உருவாகும் தளபதி 68 திரைப்படத்தில் ஷாருக்கான் கெஸ்ட் ரோலில் நடித்துக் கொடுப்பதாக வாக்கு கொடுத்திருக்கிறார். அந்த வகையில் தற்போது இந்த இரண்டு டாப் நடிகர்களும் வேறு ஒரு திரைப்படத்திலும் இணைய இருக்கிறார்கள்.

இது நிச்சயம் ஆச்சர்யத்தையும், உற்சாகத்தையும் தரக்கூடிய தகவல் தான். அதாவது தளபதி 68 திரைப்படத்தை தொடர்ந்து தளபதி 69 படத்திற்கான ஆரம்ப கட்ட வேலைகளும் தற்போது தொடங்கி இருக்கிறது. அதன்படி அப்படத்தை இயக்குனர் ஷங்கர் மிகவும் பிரம்மாண்டமாக இயக்க இருக்கிறார். இந்த செய்தி தான் இப்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Also read: 30 நாளை கடந்து வாரிசு படத்தின் வசூல் ரிப்போர்ட்.. தில்ராஜுக்கு விழுந்த அடி

ஏற்கனவே விஜய் சங்கரின் இயக்கத்தில் நண்பன் திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆனால் அது நேரடி தமிழ் படம் கிடையாது. ஹிந்தி திரைப்படத்தின் ரீமேக் தான். அந்த வகையில் தற்போது இந்த கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அது மட்டுமல்லாமல் இப்படம் டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டை மையப்படுத்தி உருவாக இருக்கிறதாம்.

அப்படி என்றால் நிச்சயம் ஒரு டாப் ஹீரோ தான் விஜய்யுடன் இணைந்து நடிப்பார் என பலரும் எதிர்பார்த்த வேலையில் தற்போது ஷாருக்கானிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அவரும் இதில் நடிப்பதற்கு ரொம்பவும் உற்சாகமாக சம்மதம் தெரிவித்திருக்கிறார். அந்த வகையில் இந்த தகவல் நூறு சதவீதம் உறுதி செய்யப்பட்ட தகவலாக இருக்கிறது. தற்போது லியோ திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வரும் நிலையில் அதையே ஓவர் டேக் செய்யும் வகையில் தளபதி 69 உருவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Also read: அஜித், விஜய்க்கு போட்டியாக களம் இறங்கிய தனுஷ்.. வாத்தி வசூலை குவிக்க போட்டிருக்கும் திட்டம்

Trending News