ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

காட்டுத் தீ போல் பரவும் தளபதி 69 போஸ்டர்.. ரஜினி பட இயக்குனருடன் கூட்டணி போடும் விஜய்

Thalapathy 69 Poster : விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் தி கிரேட்டஸ்ட் ஆல் டைம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவாக நடந்து வரும் நிலையில் தளபதி 69 படத்திற்கான போஸ்டர் ஒன்று வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி இருக்கிறது.

விஜய்யின் படத்தை தயாரிக்க பெரிய நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு இருக்கிறது. இப்போது கோட் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. அடுத்ததாக தளபதி 69 படத்தை பிரமாண்ட நிறுவனமானசன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிக்க இருக்கிறார்.

மேலும் ரஜினியின் பேட்ட படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க இருக்கிறார். ஏற்கனவே இதுகுறித்து தகவல் கசிந்த நிலையில் தளபதி 69 படத்திற்கான போஸ்டர் வெளியாகி இருக்கிறது. இந்த போஸ்டர் எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. ஏனென்றால் சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக இந்த போஸ்டரை வெளியிடவில்லை.

Also Read : விஜய்யை விடாமல் துரத்தி பிடித்த ரஜினி பட இயக்குனர்.. பல நூறு கோடி முதலீட்டிற்கு சன் பிக்சர்ஸ் உடன் போட்டி போடும் நிறுவனம்

ஏனென்றால் ரசிகர்களால் உருவாக்கப்பட்ட இந்த போஸ்டர் தளபதி 69 என்ற ஹேர்டேக் உடன் ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது. ஆகையால் விரைவில் சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் போஸ்டரை வெளியிட வாய்ப்பு இருக்கிறது. கார்த்திக் சுப்புராஜ் கடைசியாக லாரன்ஸ் மற்றும் எஸ்ஜே சூர்யா நடிப்பில் உருவான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்ற படத்தை இயக்கியிருந்தார்.

மேலும் இந்த படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றதுடன் வசூலை வாரி குவித்தது. விஜய் உடன் முதல் முறையாக கார்த்திக் சுப்புராஜ் கூட்டணி போட உள்ளதால் இந்த படம் எந்த மாதிரியான கதை அம்சத்தை கொண்டு இருக்கும் என்று ரசிகர்கள் யோசிக்க ஆரம்பித்துவிட்டனர்.

vijay-thalapathy-69
vijay-thalapathy-69

Also Read : விஜய் ரஜினிக்கு மட்டும் அள்ளிக் கொடுப்பீங்க.. இந்த விஷயத்தில் பொறாமையில் வரிஞ்சு கட்டி வரும் அஜித்

Trending News