Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

Vijay : விஜய்யின் சம்பளத்தால் பின்வாங்கிய தயாரிப்பு நிறுவனம்.. மாஸ் கூட்டணியில் உருவாகும் தளபதி 69

Vijay : விஜய்யின் சம்பளத்தால் பின்வாங்கிய தயாரிப்பு நிறுவனம்.. மாஸ் கூட்டணியில் உருவாகும் தளபதி 69

விஜய் இப்போது வெங்கட் பிரபு இயக்கத்தின் கோட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் இருக்கிறது. ஆனாலும் தளபதி 69 படத்தை பற்றிய எதிர்பார்ப்பு தான் ரசிகர்களுக்கு அதிகமாக இருக்கிறது. ஏனென்றால் இதுதான் விஜய்யின் […]

விஜய் இப்போது வெங்கட் பிரபு இயக்கத்தின் கோட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் இருக்கிறது. ஆனாலும் தளபதி 69 படத்தை பற்றிய எதிர்பார்ப்பு தான் ரசிகர்களுக்கு அதிகமாக இருக்கிறது. ஏனென்றால் இதுதான் விஜய்யின் சினிமா கேரியரில் கடைசி படமாக பார்க்கப்படுகிறது.

இதற்கான சில இயக்குனர்களின் பெயர்களும் இணையத்தில் உலாவி கொண்டிருந்தது. இந்த சுழலில் தளபதி 69 படத்தை டிவிவி நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் விஜய்யின் சம்பளம் அதிகம் என்பதால் இந்தப் படத்தில் இருந்து தயாரிப்பு நிறுவனம் விலகியதாக தகவல் வெளியானது.

அதற்கு பதிலாக மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனம் தளபதி 69 படத்தில் இணைந்துள்ளது. அதாவது கன்னடம், தெலுங்கு ஆகிய படங்களை தயாரித்த பிரபல நிறுவனமான கேவிஎன் ப்ரொடக்ஷன் தளபதி 69 படத்தை தயாரிக்க இருக்கிறது.

வினோத் இயக்கத்தில் உருவாகும் தளபதி 69

விஜய் படத்தின் மூலம் முதல்முறையாக தமிழ் படத்தை தயாரிக்க இருக்கிறது. இப்படத்திற்கு மிகப்பெரிய தொகை விஜய்க்கு சம்பளமாக பேசப்பட்டிருக்கிறதாம். இப்
படம் முழுக்க முழுக்க அரசியல் சார்ந்த கதையாக உருவாக இருக்கிறது.

அதோடு இந்த படத்தை எச் வினோத் தான் இயக்க இருக்கிறார். அஜித்தின் ஆஸ்தான இயக்குனரான இவர் கமல் படத்தை இயக்குவதாக இருந்தார். சில காரணங்களினால் கமல் படத்தை வினோத்தால் இயக்க முடியாமல் போனது. இப்போது விஜய்யின் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

மேலும் இந்தப் படத்திற்கான பேச்சு வார்த்தை இப்போது சென்று கொண்டிருக்கிறது. கோட் படத்தை முடித்த கையோடு விஜய் தனது அடுத்த படத்தை காண வேலையை தொடங்க இருக்கிறார். விரைவில் தளபதி 69 படத்திற்கான அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.