திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

மறைமுகமாக ஆப்படித்த இளைய தளபதி.. ரெட் ஜெயிண்ட் மூவிஸ்சை பழிக்கு பழிவாங்கிய விஜய்

இளைய தளபதி விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான பீஸ்ட் படத்திற்கு வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்தாலும், ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதனால் இந்த படத்திற்கு பிறகு விஜய் நடிக்கும் வாரிசு படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது.

எனவே பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் வாரிசு படத்தின் தியேட்டர் உரிமைக்கு பல போட்டிகள் நிலவி வருகிறது. இந்த போட்டி ராக்போர்ட் முருகானந்தம், ரெட் ஜெயிண்ட் மூவிஸ் போன்ற பெரிய பெரிய நிறுவனங்கள் அதன் தியேட்டர் உரிமையை வாங்க போட்டி போட்டு வருகிறது.

Also Read: வாரிசை பார்த்து பின்வாங்கும் நிலைமையில் அஜித்தின் துணிவு.. உருளும் வினோத்தின் தலை

இந்நிலையில் இந்த உரிமை லலித்திடம் சென்றது. இதற்கு காரணம் தளபதி விஜய் தான் என்று கூறுகிறார்கள். ஏனென்றால் இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் ஒரு நாள் முன்ன பின்ன ரிலீசான கேஜிஎப் 2 மற்றும் பீஸ்ட் படத்தின் தியேட்டர் உரிமைகளை ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் வாங்கியது.

அப்போது கேஜிஎப் 2 படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்தவுடன் பீஸ்ட் படத்தை கழட்டி விட்டது ரெட் ஜெயிண்ட் மூவிஸ். பீஸ்ட் படத்தை எல்லா இடங்களிலும் காட்சிகளை கம்மி பண்ணியது. இப்படி கழட்டி விட்டதால் அது ஒரு தோல்வி படம் போல் ஆகியது.

Also Read: வாரிசு சூட்டிங் ஸ்பாட்டில் கோவப்பட்ட விஜய்.. அதிரடியாக எடுத்த முடிவு

ஆனால் கேஜிஎப் 2 படத்திற்கு மட்டும் முன்னுரிமை கொடுத்து அதிக காட்சிகளை காட்சிகளை திரையிட்டு பீஸ்ட் படத்தின் தோல்விக்கு வித்திட்டது. ஆகையால் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனத்தின் மீது விஜய் செம காண்டில் இருந்திருக்கிறார்.

அதற்கு பழி தீர்ப்பதற்காகவே இப்போது வாரிசு படத்தின் தியேட்டர் உரிமையை ரெட் ஜெயிண்ட் மூவிஸ்க்கு கொடுக்காமல் அந்த வாய்ப்பை லலித்திடம் தளபதி விஜய் கொடுத்திருக்கிறார். ஏற்கனவே இவர்களது கூட்டணியில் பல வெற்றிகள் கிடைத்த நிலையில் வாரிசு படத்திற்கும் மாபெரும் வெற்றி கிடைக்கும் என விஜய் நம்புகிறார்.

Also Read: தீபாவளியன்று சரவெடியாய் வெளிவந்த வாரிசு போஸ்டர்.. சம்பவம் செய்யும் தளபதி

Trending News