வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

விஜய் தவற விட்டு ஃபீல் பண்ணிய 5 படங்கள்.. விக்ரமின் வெற்றி படத்தை ரிஜெக்ட் செய்த தளபதி

Actor Vijay: பொதுவாக முன்னணி நடிகர்களாக இருப்பவர்களுக்கு தொடர்ந்து பல பட வாய்ப்புகள் குவிந்து வரும். அந்த நேரத்தில் அவர்கள் முக்கியமான கதை மற்றும் இயக்குனர்களிடம் மட்டும் ஓகே சொல்லிவிட்டு மற்ற கதைக்கு மறுத்து விடுவார்கள். அப்படித்தான் விஜய்யும் சில இக்கட்டான சூழ்நிலையில் வேண்டாம் என்று ஐந்து படங்களை உதறித் தள்ளி இருக்கிறார். அப்படிப்பட்ட படங்களை பற்றி பார்க்கலாம்.

சண்டக்கோழி: என் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு சண்டக்கோழி திரைப்படம் வெளிவந்தது. இதில் விஷால், மீரா ஜாஸ்மின், ராஜ்கிரண் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் கிராமத்துக் கதையை மையப்படுத்தி இருக்கும். இக்கதையே முதலில் இயக்குனர் விஜய்யிடம் தான் சொல்லியிருக்கிறார். ஆனால் அவருக்கு கதை அந்த அளவுக்கு பிடிக்காததால் வேண்டாம் என்று மறுத்துவிட்டார். அதன் பின் விஷால் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

Also read: விஜய்யிடம் காரை பரிசாக வாங்க 4 பிரபலங்கள்.. ஓடாத படத்திற்கு இவ்வளவு பில்டப் தேவையா தளபதி

அனேகன்: கே.வி.ஆனந்த் இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு அனேகன் திரைப்படம் வெளிவந்தது. இதில் தனுஷ், கார்த்திக், அமிரா தஸ்தூர் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படம் நான்கு வெவ்வேறு காலகட்டங்களில் அமைக்கப்பட்ட மறுபிறவியின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும். இப்படத்தின் கதையை இயக்குனர் விஜய்யிடம் சொல்லி இருக்கிறார். அவருக்கு இந்த கதை பிடித்து போனதால் கண்டிப்பாக நான் பண்ணுகிறேன். ஆனால் கத்தி படம் முடியட்டும் என்று சொல்லி இருக்கிறார். ஆனால் அதற்கு நேரம் இல்லாததால் தனுஷை வைத்து வெற்றியை கொடுத்து விட்டார்.

முதல்வன்: எஸ் ஷங்கர் இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு முதல்வன் திரைப்படம் வெளிவந்தது. இதில் அர்ஜுன், மனிஷா கொய்ராலா, ரகுவரன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் அரசியலில் இருக்கும் சூட்சுமங்களை எடுத்துச் சொல்லும் கதையாக அமைந்திருக்கும். இந்த கதையை முதலில் விஜயுடன் சொல்லி ஓகே ஆன பிறகு எஸ்ஐ சந்திரசேகர், இயக்குனரிடம் அரசியல் சம்பந்தமான கேரக்டர் என்னுடைய பையனுக்கு செட்டே ஆகாது என்று மறுத்துவிட்டார்.

Also read: சூப்பர் ஹீரோ கதையை நம்பி மோசம் போன 5 ஹீரோக்கள்.. விஜய் விக்ரமுக்கும் இதே நிலைமைதான்!

தூள்: தரணி இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு தூள் திரைப்படம் வெளிவந்தது. இதில் விக்ரம், ஜோதிகா, ரீமாசென் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் கதை ஆண்டு கிராமத்தில் நடக்கும் பிரச்சனைகளை சரி செய்ய துடிக்கும் கதாநாயகனை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும். இந்தக் கதையை முதலில் விஜய்யிடம் தான் இயக்குனர் சொல்லி இருக்கிறார். ஆனால் விஜய்க்கு இந்த கதை பிடிக்காததால் வேறு ஏதாவது கதை இருந்தால் சொல்லுங்கள் நடிக்கிறேன் என்று சொல்லிவிட்டார். ஆனால் இந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகி அதிக லாபத்தை கொடுத்தது. அதன் பின் விஜய் தரணி இயக்கத்தில் கில்லி படத்தில் நடித்தார்.

வேட்டை: என் லிங்குசாமி இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வேட்டை திரைப்படம் வெளிவந்தது. இதில் மாதவன், ஆர்யா, சமீரா ரெட்டி மற்றும் அமலாபால் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படம் இரண்டு சகோதரர்களின் இயல்பான கேரக்டரை மையப்படுத்தி அமைந்திருக்கும். இப்படத்தின் கதையே முதலில் விஜய் இடம் தான் சொல்லி இருக்கிறார். ஆனால் அவர் செகண்ட் ஆப் கதையே சில மாற்றங்கள் செய்ய சொல்லி இருக்கிறார். அதற்கு விருப்பம் இல்லாத இயக்குனர் மாதவனை வைத்து படத்தை எடுத்து விட்டார்.

Also read: லியோ டைட்டிலால் விஜய்க்கு வந்த புது தலைவலி.. ஃப்ரீயா உருட்டுர விளம்பரமா இருக்கே!

Trending News