TVK Vijay and Pussy Anand: வெற்றிக்கொடி பிடித்திடுவோம் நாம் வீரநடை போட்டு நடந்திடுவோம் என்ற லட்சியத்தை நோக்கி விஜய் அடியெடுத்து வைக்கும் பாதை தான் அரசியல். அந்த வகையில் இறங்கியதும் ஆட்சியைப் பிடித்து விட முடியாது என்பதை தெரிந்து கொண்ட தளபதி சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னாடி இன்னும் இரண்டு வருடங்கள் இருப்பதால் அதற்குள் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் பல விஷயங்களில் இறங்கி நல்ல பெயரை வாங்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டார்.
அதற்காக ஒரு பக்கம் மாணவர்களை குறி வைக்கும் விதமாக பாராட்டு விழாக்கள் நடத்தி வருகிறார். இன்னொரு பக்கம் மக்களின் முதன்மையான குறை என்ன என்று தெரிந்து கொண்டு பசியில்லா திட்டத்தை அமுல்படுத்த மண்டபத்திற்கு பக்கத்தில் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகளை நியமிக்கப்பட்டு வறுமையில் வாடும் மக்களுக்கு உணவளித்து அவர்களை சந்தோஷப்படுத்தும் விதமாக முயற்சி எடுத்து வருகிறார்.
மாவட்ட ரீதியாக சென்று கட்டளை போடும் புஸ்ஸி
இப்படி மக்களின் தேவைகளை பார்த்து பார்த்து பூர்த்தி செய்து வரும் தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக புஸ்ஸி மாவட்ட ரீதியாக சென்று உறுப்பினர்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் நாமக்கல், ஈரோடு, மதுரை போன்ற பல மாவட்டங்களில் போயிட்டு வந்த புஸ்ஸி தற்போது திருப்பூர் பக்கமும் தலையைக் காட்டி இருக்கிறார்.
அங்கே பேசிய புஸ்ஸி, கட்சியில் சேர வேண்டும் என்றால் சில கட்டளைகள் இருக்கிறது என்று கூறி வெறும் பேருக்காகவும் புகழுக்காகவும் யார் வந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படாது. உண்மையாக மக்களுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்று நினைத்து நன்றாக கடின உழைப்பை காட்டுபவர்களுக்கு மட்டுமே தமிழக வெற்றி கழகத்தில் இடம் உண்டு என்பதை தெரிவித்திருக்கிறார்.
அதாவது திருப்பூர் முதன்மைபாளையத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட புஸ்ஸி ஆனந்துக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுக்கப்பட்டது. அப்பொழுது நிர்வாகிகளிடம் பேசிய அவர் திருப்பூர் மாவட்ட 8 சட்டமன்ற தொகுதிகளிலும் நமது தமிழக வெற்றிக் கழக கொடி பறக்க விட வேண்டும்.
அதற்கு நாம் அனைவரும் கடின உழைப்பை கொடுக்க வேண்டும். அந்த வகையில் போஸ்டர் ஒட்டி, கொடி பிடித்து கட்சிக்காக உழைக்க வேண்டும். அப்படிப்பட்ட உறுப்பினர்களை நிச்சயமாக தமிழக வெற்றி கழகம் கைவிடாது என்று வாக்குறுதி கொடுத்திருக்கிறார். இதனை தொடர்ந்து கூடிய விரைவில் உங்களை சந்திப்பதற்கு தளபதி விஜய் அவர்களும் நேரில் வருவார் என்று கூறியிருக்கிறார்.
இதனை தொடர்ந்து கரூரில் பேசிய பொழுது கட்சிக்காக முழு மனதுடன் வெற்றியை நோக்கி அயராது பாடுபட வேண்டும். அத்துடன் மக்களின் குறைதீர்க்கும் வகையில் இப்பொழுதிலிருந்து அவர்களுடைய கஷ்டத்தை போக்கும் வகையில் ஒவ்வொரு விஷயங்களிலும் நாம் ஈடுபட வேண்டும். அதன் மூலம் அவர்களுக்கு பெரிய நம்பிக்கை நம் கட்சியின் மீது ஏற்பட வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
இவர் ஒரு பக்கம் கட்சிக்காக மெனக்கெடு செய்வது வரவேற்கத்தக்கதாக இருந்தாலும் இதுவரை விஜய் கட்சியின் சார்பாக எந்தவித மாநாடு மற்றும் வாக்குறுதியும் கொடுக்காமல் புஸ்ஸி-யை மட்டும் பேசவிட்டு வேடிக்கை பார்த்து வருகிறார். இதனால் கூடிய விரைவில் விஜய் அதற்கான ஆயத்த வேலைகளில் ஈடுபட்டு மக்களின் நம்பிக்கையே சேகரிக்க வேண்டும். அப்பொழுதுதான் தமிழக வெற்றி கழகத்தின் கட்சி ஒரு முழுமையான ஆட்சி செய்யக்கூடிய அதிகாரமாக மாறும்.
வெற்றிக் கொடியை நாட்ட போராடும் TVK
- TVK திட்டத்தை காலி பண்ண மாணவர்களை குறி வைக்கும் DMK
- மாவட்ட வாரியாக கலக்க போகும் TVK தலைவர்
- 2026-ல் நடக்க போகும் மெகா கூட்டணி