வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

விஜய் நடிப்பில் வெளியாகி மெர்சல் பண்ணிய 8 படங்கள்.. வேறுபரிமாணமாய் இளைய தளபதி உருவான விதம்

வணக்கம் சினிமா பேட்டை வாசகர்களே! நமது வலைதளத்தில் தொடர்ந்து பல சுவாரசியமான சினிமா செய்திகளை கண்டு வருகிறோம். இன்று தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தி, தளபதி விஜய் அவர்களின் பிறந்த தினம். பல தடைகளை தாண்டி அவர் இன்று முன்னேறி இருக்கிறார். அவரைப்பற்றிய சிறப்பு கண்ணோட்டமாக இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது. தளபதி விஜய் அவர்களின் சிறந்த 8 திரைப்படங்களின் வரிசையை இப்போது பார்க்கலாம்.

பூவே உனக்காக: தமிழ் சினிமாவில் எப்போதும் வெற்றி பெரும் தாரக மந்திரம், காதல். அதிலும் தோல்வியில் முடியும் காதலுக்கு கிளாசிக் அந்தஸ்து கிடைக்கும். அந்த வகையில் தளபதி அவர்கள் சுவைத்த முதல் மாபெரும் வெற்றி என்றால் அது பூவே உனக்காக. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சங்கீத நடித்திருந்தார். உடன் சார்லி, மீசை முருகேஷ், நாகேஷ், நம்பியார், என்று பெரிய பட்டாளமே நடித்திருந்தது. இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளில் அவர் சிறப்பாக நடித்திருந்தார்.

காதலுக்கு மரியாதை: 1997-ஆம் ஆண்டு வெளிவந்த காதலுக்கு மரியாதை திரைப்படம் இன்னொரு மாபெரும் வெற்றி. தமிழ் சினிமாவில் முக்கியமான ஒரு இடத்தை இந்த படம் பெறுகிறது. இந்த படத்திற்கு இசை இளையராஜா. இந்த படத்தில் விஜய் – ஷாலினி ஜோடி சிறப்பாக நடித்திருந்தனர். 200 நாட்களுக்கு மேல் ஓடியது இந்த திரைப்படம். மலையாள திரைப்படமான அணியற்றதுபிறாவு என்ற படத்தின் ரீமேக் தான் இந்த படம் என்பது கூடுதல் தகவல்.

குஷி: இயக்குனர் எஸ்.ஜெ. சூர்யா இயக்கத்தில் விஜய் – ஜோதிகா இணைந்து நடித்த திரைப்படம் குஷி. இந்த படத்தில் அவர்கள் இருவரும் கல்லூரி காலத்து காதலர்களாக சிறப்பாக நடித்திருப்பார்கள். அவர்களுக்குள் வரும் ஈகோ பிரச்னையை சிறப்பாக இயக்குனர் கையாண்டு இருப்பார். இந்த திரைப்படம் வசூலை வாரி குவித்தது. மேலும் இந்த படத்தின் பாடல்களும், தளபதி அவர்களது நடனமும் மிகவும் பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கில்லி: தரணி இயக்கத்தில் ஒக்கடு என்னும் தெலுங்கு படத்தின் தமிழ் ரிமேக் ஆன கில்லியில் சும்மா பட்டாசு போல நடித்திருந்தார் விஜய் அவர்கள். இந்த படம் ஆரம்பம் முதல் இறுதிவரை விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் சென்றது. 200 நாட்கள் வரை ஓடிய இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக த்ரிஷா. வில்லனாக பிரகாஷ் ராஜ் மிரட்டி இருப்பார். இந்த படம் தமிழ் சினிமா வசூலில் முக்கிய திரைப்படம் என்றால் அது மிகை அல்ல. பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். வித்யாசாகர் இசை.

போக்கிரி: பிரபுதேவா இயக்கத்தில் வெளியான போக்கிரி படத்தில் விஜய் அண்டர் கவர் போலீசாக நடித்திருப்பார். ஜோடியாக அசின். எல்லா பாடல்களும் அருமை. மிகப்பெரும் வெற்றி பெற்றது இந்த படம். இந்த படத்தில் இடம்பெற்ற வடிவேலுவின் காமெடி சிறப்பாக வந்திருக்கும். இன்று வரை அதற்கு ரசிகர்கள் அடிமையாக உள்ளனர். மேலும் பிரகாஷ்ராஜுடன் தளபதி போடும் சண்டை, அருமையாக படம் பிடித்து காட்டியிருந்தனர்.

துப்பாக்கி: புதுமை இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் தளபதி காஜல் அகர்வால் இணைந்து நடித்த திரைப்படம் துப்பாக்கி. இந்த படத்தில் ஸ்லீப்பர் செல் எனப்படும் தீவிரவாதிகளை பற்றி சிறப்பாக காண்பித்து இருந்தனர். இந்த படத்தில் தளபதி அவர்கள் உயர் ராணுவ அதிகாரியாக வருவார். அதிலும் 10 தீவிரவாதிகளை தனது கமாண்டோக்களுடன் அவர் போட்டு தள்ளும் காட்சி சிறப்போ சிறப்பு. மிஸ் செய்ய கூடாத திரைப்படம்.

நண்பன்: த்ரீ இடியட்ஸ் படத்தின் அதிகாரபூர்வ மறு ஆக்கத்திற்கு தளபதி விஜய்யை விட சிறந்த நடிகர் யாரும் இல்லை. கல்லூரி நண்பர்களாக இவருடன் ஜீவா, ஸ்ரீகாந்த் நடித்திருந்தனர். ஹிந்தியை போலவே தமிழிலும் மாபெரும் வெற்றி பெற்ற இந்த படத்தை ஷங்கர் இயக்கி இருந்தார். ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்திற்கு இசை அமைத்திருந்தார்.

மெர்சல்: தளபதி அவர்களது திரைப்பயணத்தில் அதிக விமர்சனம் பெற்ற திரைப்படம் மெர்சல். இந்த படத்தை பாஜக முட்டுக்கட்டை போட்டு தடுக்க பார்த்தார்கள். ஆனபோதும், தளபதி அண்ட் டீம் இந்த படத்தை சொன்ன நேரத்தில் சொன்னது போல வெளியிட்டார்கள். படம் மாபெரும் வெற்றி பெற்றது. இன்று வரை சிறப்பான ஒபெனிங்கினில் இந்த படமும் இருப்பதே அதற்கு சான்று.

இந்த படங்கள் தவிர தளபதி நடித்த கத்தி, தேறி, பிகில் போன்ற படங்களும் மாபெரும் வெற்றி பெற்றன. தளபதி தான் தற்போது தயாரிப்பாளர்களின் அட்சயபாத்திரம் என்றால் அது மிகையல்ல.

Trending News