வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

மாஸ் என்ட்ரியால் கதி கலங்கும் பெரும்புள்ளிகள்.. நியூ லுக்கில் நீலாங்கரையை வட்டமிட்ட தளபதி விஜய்

Actor Vijay: கடந்த சில நாட்களாகவே விஜய் மாணவர்களை சந்திக்க போகும் நிகழ்ச்சியை பற்றிய செய்திதான் பெரும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அதன்படி இன்று 234 தொகுதிகளிலும் நல்ல மதிப்பெண் பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளை நேரில் சந்திக்கும் விஜய் அவர்களுக்கான நலத்திட்ட உதவிகளையும் வழங்க இருக்கிறார்.

நியூ லுக்கில் தளபதி விஜய்

actor-vijay
actor-vijay

அதனாலேயே இன்று காலை முதலே சோசியல் மீடியாக்கள் உட்பட அனைத்து மீடியாக்களும் பரபரப்புடன் இருந்தனர். அது மட்டுமல்லாமல் விஜய்யின் வீட்டுக்கு வெளியில் பத்திரிகைக்காரர்களும், ரசிகர்களும் சூழ்ந்து கொண்டு அவரின் வரவை ஆவலுடன் எதிர்பார்த்தனர். இது ஒரு புறம் இருக்க தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் நேற்று இரவே சென்னைக்கு வரவழைக்கப்பட்டு பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர்.

Also read: பணத்திற்காக ஆடுபுலி ஆட்டம் ஆடிக் கொண்டிருக்கும் தளபதி.. பக்கா அரசியல்வாதியாக மாறிய விஜய்

இப்படி அனைத்து வேலைகளும் ஜோராக நடந்து கொண்டு இருந்த நிலையில் தற்போது விஜய் நீலாங்கரையில் இருக்கும் தன் வீட்டிற்கு அருகில் உள்ள பிரம்மாண்ட மண்டபத்திற்கு மாஸ் என்ட்ரி கொடுத்துள்ளார். அதற்காகவே காத்திருந்த மாணவர்கள் அனைவரும் பலத்த கரகோஷத்துடன் அவருக்கு வரவேற்பு அளித்தனர்.

மாஸ் என்ட்ரி கொடுத்த விஜய்

vijay-cinemapettai
vijay-cinemapettai

அதைத் தொடர்ந்து விஜய் ஒவ்வொரு மாணவர்களையும் பார்த்து கையசைத்தபடியே வந்தார். அதிலும் அவருடைய புது லுக் தான் இப்போது பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. லியோ படத்திற்காக வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் இருந்த அவர் இப்போது ட்ரிம் செய்யப்பட்ட மீசை, தாடி மற்றும் அழகாக ஹேர் கட் செய்து அட்டகாசமாக வந்து இறங்கி இருக்கிறார்.

Also read: சர்ச்சையில் சிக்கி லியோ போஸ்டர்.. அரசியலுக்கு வர நேரத்தில் இப்படியா?

மேலும் மாணவர்கள் அனைவருடனும் போட்டோ எடுத்துக் கொண்ட அவர் தனிப்பட்ட முறையில் சில மாணவர்களின் அருகில் அமர்த்தும் விசாரித்தார். அதில் மாற்றுத்திறனாளி மாணவன் கீர்த்தி வர்மா விஜய்யின் புகைப்படத்தை வரைந்து அவருக்கு பரிசளித்துள்ளார். அதை பார்த்த அவர் மாணவனை கட்டித்தழுவி தன் அன்பை வெளிப்படுத்தினார்.

மாணவர்கள் அனைவருடனும் போட்டோ எடுத்துக் கொண்ட விஜய்

vijay-students-meet
vijay-students-meet

மேலும் 600 க்கு 600 மதிப்பெண் பெற்று சாதனை படைத்த மாணவி நந்தினிக்கு விஜய் வைர நெக்லஸ் அளித்து கௌரவித்தார். இப்படியாக ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்வில் விஜய் பேச இருக்கும் விஷயங்களை கேட்க ஒட்டுமொத்த மீடியாவும் தற்போது ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் விஜய்யின் இந்த மாஸ் என்ட்ரியையும், அதற்கு கிடைக்கும் வரவேற்பையும் பார்த்து பெரும்புள்ளிகள் கொஞ்சம் கதிகலங்கி தான் போயிருக்கின்றனர்.

வைர நெக்லஸ் பரிசளித்த விஜய்

vijay-meet-students
vijay-meet-students

Also read: 23 வருடங்கள் ஆகியும் விஜய் பக்கத்தில் நெருங்க முடியாமல் தவிக்கும் அஜித்.. கேரளாவின் வசூல் மன்னனாக வரும் தளபதி

Trending News