Vijay student meet: “எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு” என்பது திருக்குறள். இதையே இன்று மாணவர்களிடையே ஸ்டைலாக சொல்லிவிட்டார் தளபதி. கடந்த சில தினங்களாக விஜய் மற்றும் த்ரிஷா பற்றிய கிசு கிசு சமூக வலைத்தளத்தில் பற்றி எரிந்தது.
நாட்டாமை தம்பி பசுபதி டீச்சர் வச்சிருக்கார் என்ற காமெடி முதல், எம்ஜிஆருக்கு ஒரு ஜெயலலிதா மாதிரி விஜய்க்கு ஒரு த்ரிஷா என்கிற அளவுக்கு இந்த நக்கல் நையாண்டி எல்லாம் போனது. எல்லாத்துக்கும் காரணம் திரிஷா சொன்ன பிறந்தநாள் வாழ்த்து தான்.
ஏற்கனவே விஜய் த்ரிஷா கிசு கிசு சில வருடங்களுக்கு முன்பு வந்தது. அதன் பிறகு தமிழ்நாடு மக்களை அதை மறந்து இருந்த நிலையில் லியோ படத்தின் மூலம் மீண்டும் கிளப்பி விட்டு விட்டார் லோகேஷ். தளபதி போட்டோ சட்ட மாதிரி திரிஷா போட்டு இருக்காங்க, தளபதி போட்டிருந்த ஷூ மாதிரி திரிஷா போட்டு இருக்காங்கன்னு ஏகத்துக்கும் நிறைய புகைப்படங்கள் வெளிவந்து கொண்டிருந்தன.
தவெக தலைவரின் நெத்தியடி
இருவரும் ஒன்றாக வாழ்வதாகவும், சங்கீதாவை விஜய் பிரிந்து நான்கு வருடங்கள் ஆகிறது என்பது போலவும் கதைகள் எல்லாம் வெளியானது. இதற்கு நெத்தியடி பதில் ஒன்றை கொடுத்திருக்கிறார் தளபதி. மாணவர்கள் இடையே பேசிய தளபதி சமூக வலைத்தளங்களால் நல்லவர்களை கெட்டவர்களாக காட்ட முடியும், கெட்டவர்களை நல்லவர்களாக காட்ட முடியும்.
இன்டர்நெட்டில் இருக்கும் எல்லாத்தையும் பாருங்க, ஆனா அதுல எது உண்மைன்னு விசாரிச்சு தெரிஞ்சுக்கோங்க என்று சொல்லி இருக்கிறார். அதாவது, அரசியலுக்கு வந்த பிறகு விஜய் மீது எந்த குற்றச்சாட்டை வைக்க முடியும் என யோசித்து தானாக மாட்டிக் கொண்ட ஆடாக த்ரிஷாவை இந்த பிரச்சனையில் கொண்டு வந்து விட்டிருக்கிறார்கள். இதைத்தான் சூசகமாக சொல்லிவிட்டார் தளபதி விஜய்.