வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

எம்ஜிஆரை அட்ட காப்பியடிக்கும் தளபதி விஜய்.. வேற என்ன பண்றது!

இன்று முன்னணியில் இருக்கும் பல நடிகர்களும் இதற்கு முன்னர் முன்னணி நடிகர்களாக இருந்த பலரையும் பின்பற்றுவது பொதுவான விஷயம்தான். ஒரு நடிகரிடம் இருந்து சில விஷயங்களை காப்பி அடித்தால் பரவாயில்லை. அந்த நடிகரை அப்படியே பின்பற்றுவதுதான் பிரச்சனையே. அப்படிப்பட்ட விஷயத்தை தான் விஜய் செய்து வருகிறார்.

இன்றைய தேதிக்கு தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தளபதி விஜய். சமீபத்தில் இவரது அடுத்த படமான பீஸ்ட் படத்தில் இருந்து வெளியான அரபிக் குத்து பாடல் சில நாட்களிலேயே பல மில்லியன் பார்வையாளர்களை குவித்து வருகிறது. இந்த படத்தின் மீது தான் தற்போது ஒட்டுமொத்த இந்திய சினிமா திரை உலகமும் எதிர்பார்ப்பை வைத்துள்ளது.

அனிருத் இசையில் வெளியான அரபிக் குத்து பாடல் வெளியாவதற்கு முன்னரே சிவகார்த்திகேயன் அனிருத் விஜய் படத்தின் இயக்குனர் நெல்சன் என அனைவரும் இணைந்து ஒரு ஜாலியான ப்ரோமோ ஒன்றை வெளியிட்டு பாடலின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து நினைத்தபடி பாடலை வெற்றியடைய வைத்துவிட்டனர்.

சமீபகாலமாக விஜய் தன்னுடைய படங்களில் இசையமைக்கும் இசையமைப்பாளர்களுடன் இணைந்து ஒவ்வொரு பாடலையும் எப்படி கொண்டுவர வேண்டும் என ஐடியா கொடுப்பதாகவும் அதேபோல் லிரிக்ஸ் முதற்கொண்டு எப்படி அமைய வேண்டும் என்பதிலும் அவருடைய தலையீடு அதிகமாக இருப்பதாகவும் கோலிவுட் வட்டாரங்களில் அதிகளவு பேசி வருகின்றனர்.

இதை அப்படியே பல வருடங்கள் முன்னாடி எடுத்துச் சென்றால், தமிழ் சினிமாவில் நாடக நடிகராக அறிமுகமாகி பின்னர் அளவுக்கு முன்னணி நடிகராக வலம் வந்த மக்கள் மனதில் இடம் பிடித்த எம்ஜிஆரை பார்த்த மாதிரியே இருக்கிறது. எம்ஜிஆர் எப்போதுமே தன்னுடைய படங்களில் இடம்பெறும் கதைகளில் இருந்து பாடல்கள் வரை அனைத்திலும் தன்னுடைய ஈடுபாட்டை செலுத்துவார்.

ரஜினியும் அப்படித்தான் இருப்பதாக ஒரு காலகட்டத்தில் செய்திகள் வந்தன. தற்போது தளபதி விஜய்யும் அதே பாணியைத்தான் பின்பற்றி வருகிறாராம். ஆறிலிருந்து அறுபது வரை ரசிகர்களை வைத்திருக்கும் நடிகர்கள் இந்த மாதிரி விஷயங்களில் கவனம் செலுத்துவது ஒன்றும் புதிதல்ல. சில சமயம் கை கொடுக்காவிட்டாலும் பல சமயம் அவர்களது கணிப்பு சரியாக இருப்பதால் தான் தொடர்ந்து செய்து வருகின்றனர்.

Trending News