திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

தளபதியை போட்டு கொடுக்க தனி ரூட் போடும் SAC.. உச்சக்கட்ட பயத்தில் விஜய்!

தளபதி விஜய் அவர்களுக்கு திரைத்துறையில் கால் பதித்த ஆரம்ப காலகட்டத்தில் அவருக்கு உறுதுணையாக இருந்தவர் அவருடைய தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர். விஜய்யின் திரைப்பயணத்தின் பாதையை போட்டுக் கொடுத்தவர் எஸ்ஏ சந்திரசேகர் தான். தனது தந்தையின் இயக்கத்தில் பல படங்களில் தளபதி விஜய் நடித்திருக்கிறார். விஜய் பற்றி பலர் பல விமர்சனங்களை முன் வைத்தாலும் அதையெல்லாம் காதில் வாங்காமல் மகனுக்காக பல படங்களை எடுத்து நஷ்டம் ஆனாலும் விடாமல் விஜய்யின் பக்க பலமாக நின்றவர்.

அப்படிபட்ட நல்ல அப்பாவாக இருந்த தந்தைக்கும் விஜய்க்கும் ஏனோ தெரியவில்லை சமீபகாலமாக தந்தைக்கும் மகனுக்கும் சத்தமே இல்லாமல் ஒரு பனிப்போர் நடந்து கொண்டிருக்கிறது. அது வீட்டில் மட்டும்தான் என்று நினைத்த போது பல மேடைகளில் அதை கண்கூடாக பார்க்க முடிந்தது. எதை எல்லாம் வெளியில் சொல்லக்கூடாது என்று விஜய் மறைக்க நினைக்கிறாரோ..? அதை எல்லாம் ஓபன் ஆக மேடைகளில் அவரது தந்தை எஸ்ஏசி சொல்லிவிடுகிறார்.

இதனால் இவருக்கும் தளபதி விஜய் இருவருக்கும் கருத்து மோதல்கள் இருந்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தளபதி விஜய்யின் தந்தையான எஸ்ஏசி அவர்கள் புதிதாக ஒரு யூடியூப் சேனலை தொடங்க இருக்கிறார். அந்த யூடியூப் சேனலில் சினிமா பற்றிய தன்னுடைய அனுபவத்தையும் தான் கடந்து வந்த பாதையை பற்றியும் பேச இருப்பதாக சொல்லப்படுகிறது.

மேலும் இந்த சேனலில் தளபதி விஜய்யின் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் குறித்தும் பேச இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அரசியல் தொடர்பாக எந்தவிதமான கருத்தையும் வெளியில் சொல்லாமல் கமுக்கமாக இருந்து கொள்வதை கடைபிடித்து வருகிறார் தளபதி விஜய். ஆனால் அவருடைய தந்தையான எஸ்ஏசி விஜய்யை அரசியலுக்குள் ஈடுபடுத்தி விட வேண்டும் என்ற பல நேரங்களில் விஜய்யிடம் எதுவும் கேட்காமல் இஷ்டத்திற்கு பேசி அதற்காக விஜய்யிடம் திட்டும் வாங்கியிருக்கின்றார்.

சமீபத்தில்கூட தேர்தல் பரப்புரையின் போது தன்னுடைய புகைப்படத்தையும் தன்னுடைய பெயரையும் பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று விஜய் மக்கள் இயக்கத்திற்கு தளபதி விஜய் எச்சரிக்கை விடுத்திருந்தார். அப்படி எச்சரித்தும் கூட பல இடங்களில் அவருடைய அடையாளங்கள் தான் பயன்படுத்தப்பட்டது. அதற்கும் எஸ்ஏசி தான் காரணம் என்று அவர்மீது விஜய்க்கு சரியான கடுப்பும் இருக்கிறதாம்.

இந்த நேரத்தில் இப்படி தனியாக யூடியூப் சேனல் ஆரம்பிக்கும் எஸ்ஏசி விஜய் பற்றி பல கருத்துக்களை முன்வைக்கும் போது அது விஜய்க்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்று அவரது ரசிகர்கள் ஒரு பக்கம் குமுறுகின்றனர். மற்றொரு பக்கம் தளபதி விஜய்யை பற்றி நாம் அறியாத பல விஷயங்கள் எஸ்ஏசி அவர்கள் பகிர்ந்து கொள்வார் என்று அவர் யூடியூப் சேனலுக்கு ஆதரவு குரலும் இருக்கத்தான் செய்கிறது.

Trending News