திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

கோடு போட்டா ரோடே போடும் தளபதி.. அனிருத்தை ஆச்சரியப்பட வைத்த விஜய்

தளபதி விஜய் பன்முகத் தன்மை கொண்டவர் என்பது பலரும் அறிந்த விஷயம் தான். ஹீரோவாக நடிக்க கூட தகுதி இல்லை என பலரும் கேலி, கிண்டல் செய்த நிலையில் பல திறமைகளை வளர்த்துக் கொண்டார். அவ்வாறு விஜய்க்கு ஈடாக யாராலும் நடனம் ஆட முடியாது என்ற பெயரைப் பெற்றார்.

அதேபோல் ஆரம்பத்தில் இருந்தே விஜய் தன்னுடைய படங்களில் பாடல்கள் பாடி வருகிறார். தனது அம்மா சோபாவுடன் இணைந்து பல படங்களில் பாடியுள்ளார். நடுவில் சில காலம் பாடலை தவிர்த்த விஜய் இப்போது தொடர்ந்து தன்னுடைய படங்களில் ஒரு பாடல் பாடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

Also Read : த்ரிஷாவுக்கு போட்டியாக களம் இறங்கும் 90ஸ் ஹீரோயின்.. 20 வருடத்திற்கு பிறகு விஜய்யுடன் ஜோடி போடும் நடிகை

குறிப்பாக விஜய் பாடும் பாடல் குழந்தைகளை பெரிய அளவில் கவரும். இப்போது விஜய் லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு அனிருத் தான் இசையமைத்து வருகிறார். இப்படத்திலும் விஜய்யின் குரலில் ஒரு பாடல் உருவாகி இருக்கிறது. முதலில் இந்தப் பாடலை அனிருத் ஒரு தடவை பாடி ரிகர்சல் செய்து விஜய்க்கு காண்பித்துள்ளார்.

தளபதி கோடு போட்டால் ரோடே போடக் கூடியவர், அதை அப்படியே மனதில் வைத்துக்கொண்டு ஒரு மணி நேரத்தில் பாட்டை பாடி முடித்து விட்டாராம். அதாவது ரெக்கார்டிங் ஸ்டுடியோக்கு ஒன்பது மணிக்கு வந்த விஜய் பத்து மணிக்கு பாடலை முடித்துவிட்டு சென்றுவிட்டாராம்.

Also Read : பிரம்மாண்டமா ஒரு படம் பண்ணியாச்சு, கமர்ஷியலா ஒரு ஹிட் கொடுக்கலாம் வெங்கட்.. கட்டளையிட்ட விஜய்

சாதாரணமாக ப்ரொபஷனல் பாடர்களால் கூட ஒரு மணி நேரத்தில் இவ்வளவு வேகமாக பாடலை பாட முடியாது. ஆனால் ஒரு பிழை கூட செய்யாமல் சரியான சுதியோடு ஒரு மணி நேரத்தில் விஜய் பாடி கொடுத்துவிட்டு சென்றுள்ளார். இதைக் கேட்டு அப்படியே அனிருத் அதிர்ச்சியில் உறைந்து விட்டாராம்.

விஜய் ஒரு நல்ல நடிகர் என்பது அனைவரும் அறிந்த விஷயம் தான். ஆனால் இவருக்குள் இப்படி ஒரு பாடல் திறமை இருக்கிறதா என அனிருத் அவரது பாணியில் தளபதியை பாராட்டி தள்ளி உள்ளாராம். விஜய் பாடிய அந்த பாடல் வேற லெவலில் உருவாகி இருக்கிறதாம். கண்டிப்பாக இந்த பாடல் எல்லோருக்குமே பிடிக்கும் என அனிருத் நம்பிக்கை அளித்துள்ளார்.

Also Read : வாத்தி கம்மிங் விட அட்டகாசமாக ரெடி ஆகிய லியோ பாடல்.. விஜய், அனிருத்துடன் இணைந்த கோளாறான பிரபலம்

Trending News