நடிகர் விஜய் இப்போது இயக்குனர் வம்சி பைடிபைலி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இந்த படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையில் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. ஆனால் இப்போது இந்த பட ரிலீசுக்கு நாலாபக்கமும் பிரச்சனைக்கு மேல் பிரச்சனை கிளம்பி கொண்டே இருக்கிறது.
கடந்த 10 வருடங்களுக்கு மேலாகவே விஜய்யின் படங்களுக்கு எதிர்ப்புகள் கிளம்புவதும் படம் ஹிட் ஆவதும் தொடர் கதையாக இருந்து வருகிறது. இந்த முறை பிரச்சனை சற்றும் எதிர்பார்க்காத ஒன்று. கிட்டத்தட்ட எட்டு வருடங்களுக்கு பிறகு நடிகர் அஜித்தும், விஜய்யும் ஒரே நேரத்தில் படத்தை ரிலீஸ் செய்து மோதிக் கொள்ள இருக்கின்றனர்.
Also Read: துணிவால் உச்சகட்ட பயத்தில் இருக்கும் வாரிசு.. படத்தை ஓட்டியே ஆகவேண்டும் என விஜய் செய்த ராஜதந்திரம்
அஜித்தின் துணிவு படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் கையில் எடுத்ததில் இருந்தே பிரச்சனை தான். உதயநிதி தன்னுடைய அரசியல் பின்புலத்தை பயன்படுத்தி கிட்டத்தட்ட தமிழகத்தில் பெரும்பான்மையான தியேட்டர்களை துணிவுக்கு லாக் செய்து விட்டார். வெளிநாடுகளில் வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்தி வரும் வாரிசு தமிழ்நாட்டில் தியேட்டர் கிடைக்காமல் திணறி வருகிறது.
இதற்கிடையில் கடந்த வாரம் நடிகர் அஜித் தன்னுடைய ரசிகர்களை ஊக்குவிப்பது போல் ஒரு தன்னம்பிக்கை செய்தியை வெளியிட்டார். அவ்வளவு தான் இனி சும்மா இருப்பாரா தளபதி என்பது போல் அவர் நேற்று ரசிகர்களை நேரிலேயே வரவழைத்து விட்டார். லட்சக்கணக்கான ரசிகர்கள் நேற்று அவருடைய பனையூர் அலுவலகத்தில் குவிந்து விட்டனர்.
Also Read: ரசிகர்களை ஏமாற்றிய அஜித்.. துணிவு படமே இன்னும் முடியலையாம், அதுக்குள்ள ஃபர்ஸ்ட் சிங்கிளா?
நேற்று விஜய்யை காண குவிந்த ரசிகர்கள் கூட்டத்தை பார்த்து மொத்த திரையுலகமும் அரண்டு போய் கிடக்கிறது. அஜித் செய்தி அனுப்பியதற்கே, விஜய் ரசிகர்களை நேரில் வரவழைத்துவிட்டார் என பேச தொடங்கி விட்டனர். விஜய்யை தொடர்ந்து அஜித் தன்னுடைய ரசிகர்களை சந்திப்பாரா இல்லை வேறு ஏதாவது செய்து வருமா என இனிதான் தெரியும்.
மேலும் விஜய் நேற்று தன்னுடைய மக்கள் இயக்கம் கட்சியின் மாவட்ட நிர்வாகிகளை நேரில் அழைத்து பேசியிருக்கிறார். உதயநிதி தியேட்டர் ரிலீஸில் கை வைப்பதால் அவருக்கு அரசியல் ஆட்டம் காட்ட ஏதாவது திட்டத்தை விஜய் தன்னுடைய நிர்வாகிகளை வைத்து செய்யவும் வாய்ப்பு இருக்கிறது. இந்த சந்திப்பில் என்ன நடந்தது என இனிவரும் நாட்களில் தெரிய வாய்ப்பிருக்கிறது.