திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

லியோ ரிலீஸுக்கு வந்த பெரும் சிக்கல், லோகேஷ் தலையில் விழுந்த இடி.. ஜெயிலர் வசூலை உடைக்க தளபதிக்கு வாய்ப்பு இல்லையாம்

Leo Movie: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிய லியோ படத்திற்கு உச்சகட்ட எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. லலித் தயாரிப்பில், அனிருத் இசையமைத்திருக்கும் பிரம்மாண்ட படைப்பான லியோ உலகம் முழுவதும் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இப்போது லியோ ரிலீஸுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. ஏனென்றால் தமிழ்நாட்டில் லியோ படத்தின் வசூலை பாதிக்கும் வகையில் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. வேர்ல்ட் கப் 2023 மேட்ச் தொடங்கப் போகிறது. இந்தியாவில் தான் அது நடைபெறுகிறது. சென்னையில் 6 மேட்ச் நடைபெறப்போகிறது.

Also Read: ஜெயிலர்ல ரஜினிக்கு 80 கோடி சம்பளம் எல்லாம் பொய் கணக்கு.. எம்மாடியோ லாபத்துல ஷேர் மட்டும் இத்தனை மடங்கா!

அதுவும் லியோ படம் ரிலீஸ் ஆகும் அக்டோபர் 19ஆம் தேதி இந்தியா VS பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான போட்டி விறுவிறுப்பாக நடக்கவுள்ளது. ஆகையால் கிரிக்கெட் பிரியர்கள் கிரிக்கெட்டை தான் பார்க்க விரும்புவார்கள். அன்று ரிலீஸ் ஆகும் லியோ படத்தின் வசூல் கடுமையாக பாதிக்கும். இது அந்த படத்தின் வெற்றிக்கு ஏற்பட்ட மிகப்பெரிய பிரச்சினையாக பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் இந்த மாதம் 10ம் தேதி வெளியாகி வெறும் 11 நாட்களில் 500 கோடியை உலகம் முழுவதிலிருந்தும் வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை புரிந்திருக்கிறது. அந்த ரெக்கார்டை அடுத்து ரிலீஸ் ஆகும் விஜய்யின் லியோ படம் உடைக்கும் என்று தளபதி ரசிகர்கள் நம்பிக்கை உடன் இருக்கின்றனர்.

Also Read: சும்மா இருந்த சங்கை ஊதி கெடுக்கும் லோகேஷ்.. விக்ரமை விட 10 மடங்கு பயங்கரமாக இருக்கும் லியோ

ஆனால் இந்த வேர்ல்ட் கப் 2023 நடைபெற்று லியோ படத்தின் வசூலை குலைத்து விடுமோ என்ற பயத்தில் படக்குழு மட்டுமல்ல ரசிகர்களும் இருக்கின்றனர். உலகம் முழுவதும் லியோ படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருப்பதால், மற்ற படங்களின் ரிலீஸ் தேதியை எல்லாம் தள்ளி போட்டு விட்டனர்.

ஆனால் சற்றும் எதிர்பாராத வகையில் 2023 உலக கோப்பை கிரிக்கெட் மேட்ச் நடைபெற்று பாக்ஸ் ஆபிஸ் கிங் என்ற பெயரை தக்க வைத்துக் கொண்டிருக்கும் விஜய்க்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இந்த விஷயத்தை அறிந்த சூப்பர் ஸ்டார் ரசிகர்கள், ‘ஜெயிலர் வசூலை உடைக்க தளபதிக்கு வாய்ப்பே இல்லை’ என்று கெத்து காட்டுகின்றனர். இருப்பினும் லியோ படம் ரிலீஸ் ஆகும் போது என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Also Read: 12வது நாளில் பொன்னியின் செல்வன் வசூலை முறியடித்த ஜெயிலர்.. யாரும் தொட முடியாத உயரத்திற்கு பறந்த கழுகு

Trending News