செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

லியோவை பான் இந்தியா படமாக உருவாக்க மறுத்த விஜய்.. மெய்சிலிர்க்க வைத்த தளபதியின் பதில்

விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் திரிஷா, அர்ஜுன், மன்சூர் அலிகான், சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன் போன்ற பல பிரபலங்கள் நடித்து வருகிறார்கள். இந்நிலையில் படத்தைப் பற்றிய ஒவ்வொரு அப்டேட்டும் இணையத்தில் காட்டு தீ போல் பரவி வருகிறது.

இப்போது லியோ படத்தில் தயாரிப்பாளர் லலித் படம் குறித்து சில விஷயங்களை பகிர்ந்து உள்ளார். அதாவது சமீபகாலமாக பெரிய நடிகர்களின் படங்கள் பான் இந்திய படமாக உருவாகி வருகிறது. அதேபோல் லியோ படத்தையும் ஐந்து மொழிகளில் எடுக்கலாம் என்று விஜய்யிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Also Read : விஜய் மகன் சஞ்சய் நடிக்க வேண்டும் என அடம்பிடிக்கும் 5 பிரபலங்கள்.. நிராகரித்த முக்கிய காரணம் இது தான்

மேலும் விக்ரம் படத்தின் வெற்றியினால் லியோ படத்தை பான் இந்தியா படமாக எடுக்கலாம் என லலித் கூறியுள்ளார். அதற்கு விஜய் அளித்த பதில் தான் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது. அதாவது பான் இந்தியா படம் எல்லாம் வேண்டாம், நம்ம மக்களுக்காக நம்ம படம் பண்ணிட்டு போவோம் என்று கூறியுள்ளார்.

அதன் பிறகு தான் லோகேஷ் கனகராஜ் மற்றும் லலித் இருவரும் சேர்த்து விஜய்யை அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என்று கூறி சமாதானப்படுத்தினார்களாம். இதைத்தொடர்ந்து ஸ்கிரிப்டில் பல மாற்றங்களை செய்துள்ளனர். மேலும் சஞ்சய் தத் அந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பார் என்பதால் அவரை இணைத்து கொண்டோம்.

Also Read : வயிறு குலுங்க சிரிக்க வைத்த விஜய்யின் 6 படங்கள்.. மறக்க முடியுமா நேசமணியுடன் அடித்த காமெடி

மேலும் மற்றொரு டார்கெட் என்னவென்றால் லியோ படத்தை நார்த்தில் வெற்றி அடைய செய்ய வேண்டும். அதற்காக பீகார் மற்றும் உத்தரப்பிரதேசம் போன்ற இடங்களில் உள்ள திரையரங்குகளில் லியோ படத்தை வெளியிட படிப்படியாக உழைத்து வருவதாக லலித் கூறியுள்ளார்.

மேலும் டாப் நடிகர்கள் பெரும்பாலானோர் எல்லா மொழி ரசிகர்களும் தங்களுக்கு வேண்டும் என்றும், வசூலில் நல்ல லாபம் பார்க்க வேண்டும் என பான் இந்திய படங்களை தேர்வு செய்கிறார்கள். ஆனால் தளபதி விஜய் பொருத்தவரையில் அவருடைய மக்களுக்காகவே படம் பண்ண வேண்டும் என்று சொன்னது அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Also Read : கேரியர் பெஸ்டாக வெங்கட் பிரபு கொடுத்த 5 படங்கள்.. விஜய் மெர்சலான சூப்பர் ஹிட் படம்

Trending News