சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

விஜய் மிஸ் பண்ணி பிரம்மாண்ட வெற்றி கிடைத்த 5 படங்கள்.. அஜித்துக்கு அந்தஸ்தை வாங்கி கொடுத்த தளபதி

Thalapathy Vijay Missed 5 Blockbuster Hit Movies in tamil cinema: தமிழ் சினிமாவின் டாப் ஸ்டார் ஆக இருக்கும் இளைய தளபதியின் பெயருக்காகவே இன்று படங்கள் வசூலில் மாபெரும் வெற்றி பெற்று வருகிறது. கதை தேர்வில் கவனத்துடன் இருக்கும் தளபதி பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை தவற விட்டு புலம்பிய கதையும் உண்டு. இதோ தளபதி தவறவிட்ட 5 ஹிட் படங்கள்,

தூள்: 2003 ஆண்டு தரணி தூள் படத்தின் கதையை விஜய்க்கு சொல்ல இந்த படத்தில் பெரிய ஸ்கோப் இல்லை என்று மறுத்துவிட்டாராம். விக்ரம் நடித்து ஹிட்டான நிலையில் தரணியிடம், “நீங்க என்கிட்ட கதை சொன்னது வேற! ஆனால் எடுத்தது வேற மாதிரி இருக்கு” என்று செல்ல கோபத்திற்கு பின் கில்லிக்கு ஒப்பந்தமானாராம். 2004 ல் வெளிவந்த கில்லி தளபதிக்கு வேற லெவல்ல ஹிட் கொடுத்தது.

முதல்வன்: பிரம்மாண்ட இயக்குனர் சங்கர், அர்ஜுன் மற்றும் ரகுவரன் கூட்டணியில் 1999 வெளிவந்த முதல்வன் திரைப்படத்தில், சங்கர் நடிக்க கேட்கும்போது, அதிகமாக அரசியல் உள்ளது என்றும் இதனால் பின்விளைவுகள் ஏற்படும் என்று பயந்து வேண்டாம் என்று உதறித் தள்ளினாராம் தளபதி. காலத்தின் கட்டாயம்! இன்று இவரே அரசியல் கட்சி ஆரம்பிப்பார் என்று எதிர்பார்க்கவில்லை.

Also read: விஷால் எடுத்த விபரீத முடிவு! விஜய்யை வைத்து செஞ்ச பின்புதான் அரசியலா?

சண்டக்கோழி: லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆண்டு விஷால் நடிப்பில் வெளிவந்த சண்டக்கோழி திரைப்படத்தில் காதல், ஆக்சன், இரண்டையும் சரியான கலவையுடன் கலந்து கிராமத்து வாசனையுடன் தெறிக்க விட்ட படம் சண்டக்கோழி. முதல் பாதியை மட்டும் கேட்டுவிட்டு நடிக்க மறுத்தாராம் விஜய். லிங்குசாமி விஜய் மீது இருக்க கோபத்தில் இருக்க, படத்தை பாராட்டி லிங்குசாமியை கூல் பண்ணினாராம் விஜய்.

சிங்கம்: ஹரியின் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்த சிங்கம் மற்றும் வேல் இரண்டு திரைப்படங்களையும் மிஸ் செய்தார் விஜய். பல்வேறு காரணங்களால் விஜய் மறுத்து விட அது சூர்யாவுக்கு போய் மூன்று பாகங்களாக வெளிவந்து செம ஹிட் அடித்தது மட்டுமல்லாமல் சூர்யாவுக்கு நல்ல பெயரையும் வாங்கித் தந்தது.

தீனா: அஜித்திற்கு தல என அந்தஸ்தை வாங்கி கொடுத்து ரசிகர் வட்டத்தை மேம்படுத்தியது தீனா திரைப்படம். ஏ ஆர் முருகதாஸ் அறிமுக இயக்குனராக முதலில் விஜய் இடம் கதை சொல்ல, விஜய் மறுத்த பின்பே அதை அஜித்திற்கு கூறினாராம். அந்த ஆண்டு வெளிவந்த தீனா மற்றும் பிரண்ட்ஸ் இரு திரைப்படங்களிலும் தீனாவே வசூல் அதிகம் பெற்று சாதனை செய்தது.

Also read: அஜித்தை பற்றி தப்பா டமாரம் அடிக்கும் கூட்டம்.. ஒதுங்கிக் கொள்ளச் சொல்லும் தயாரிப்பாளர்

Trending News