சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

ரிலீசுக்கு முன்பே வசூலுக்கு டார்கெட் வைத்த லியோ.. தளபதி போடும் பக்கா பிளான்

தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். மாஸ்டர் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு இவர்கள் இருவரும் மீண்டும் இணைகிறார்கள். கடந்த ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்ட இந்த படபிடிப்பானது சென்னை, ஜம்மு காஷ்மீரில் நடைபெற்றது. மூன்றாம் கட்ட படப்பிடிப்பாக சண்டை காட்சிகள் பையனூரில் படமாக்கப்பட்டது. தற்போது நான்காம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஸ்டூடியோவில் நடைபெற்று வருகிறது.

கிட்டத்தட்ட 60% படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் லியோ திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்தப் படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்துடன் மோத வாய்ப்பிருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.

Also Read:விஷாலை தூக்கி விட நினைக்கும் தளபதி.. மார்க் ஆண்டனி படத்திற்காக விஜய் செய்த காரியம்

தளபதி விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணி பெரிய எதிர்பார்ப்பை கிளப்பி வருகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடைசியாக வெளியான விக்ரம் படத்தின் மாபெரும் வசூல் தான். கிட்டத்தட்ட 500 கோடியை அந்தப் படம் தொட்டுவிட்டதால் அடுத்த படமான லியோ மீது விநியோகஸ்தர்களுக்கும் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருக்கிறது.

தளபதி விஜய்யும் இந்தப் படத்திற்காக பயங்கரமாக ஸ்கெட்ச் போட்டு வருகிறார். அவருடைய முந்தைய படமான வாரிசு எதிர்பார்த்த வசூலை அவருக்கு கொடுக்கக்கவில்லை. இதனால் மீண்டும் லியோ படத்தின் மூலம் பாக்ஸ் ஆபிஸில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என்று விஜய் முடிவெடுத்து இருக்கிறார். இதற்காக எக்கச்சக்கத் திட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

Also Read:இந்த வருடம் வைரலான 3 ஹீரோக்களின் போட்டோஸ்.. ரஜினி, அஜித்தை ஓரம் கட்டிய விஜய்

படத்தின் ரிலீசுக்கு முன்பான வியாபாரம் 300 கோடிக்கு மேல் இருக்க வேண்டும் என்பதுதான் விஜய்யின் பிளான். மேலும் இந்த முறை அவருடைய படத்தின் வசூல் ஆயிரம் கோடியை எட்டி விட வேண்டும் என்பதுதான் விஜய் போட்டு வைத்திருக்கும் ஸ்கெட்ச். ஏற்கனவே பொன்னியின் செல்வன் மற்றும் விக்ரம் திரைப்படங்களின் வசூல் 500 கோடியை தாண்டி விட்டதால் கண்டிப்பாக விஜய் எதிர்பார்ப்பது போல் லியோ ஆயிரம் கோடியை நெருங்க வாய்ப்பிருக்கிறது.

பக்கா ஆக்சன் திரைப்படம் ஆக லியோ திரைப்படம் உருவாகி வருகிறது . நீண்ட வருடங்களுக்குப் பிறகு நடிகை திரிஷாவும் விஜய்யுடன் இணைந்திருக்கிறார். மேலும் மிஷ்கின், மன்சூர் அலிகான், கௌதம் மேனன் என வித்தியாசமான கூட்டணியும் இந்த படத்தில் அமைந்து விட்டது. இதை வைத்து விஜய் அக்டோபர் மாதம் தென்னிந்திய சினிமா பாக்ஸ் ஆபிஸ் கலெக்சனை தெறிக்க விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read:பழசை மறந்து அம்மாவை தேடி போன வாரிசு.. ட்ரெண்டாகும் விஜய்யின் போட்டோ

Trending News