புஸ்ஸி ஆனந்த் கொடுத்த முரட்டு தைரியம்.. தளபதி பாண்டிச்சேரி முதலமைச்சரை சந்திக்க இதுதான் காரணம்

Thalapathy Vijay: எத செஞ்சாலும் பிளான் பண்ணி பண்ணனும் என்று வடிவேலு ஒரு காமெடியில் சொல்லி இருப்பார். அப்படி ஒரு பக்கா பிளானை தான் தளபதி தன்னுடைய சொந்த வாழ்க்கையில் செய்து வருகிறார். 250 கோடி ரூபாய் ஒரு படத்திற்கு சம்பளமாக வாங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில், திடீரென சினிமாவை விட்டு விலகுகிறேன் என விஜய் அறிவிக்கிறார்.

அவருக்கு முன் சினிமாவுக்கு வந்த நடிகர்கள் நிறைய பேர் பெரிய வெற்றியை பார்க்கவில்லை. முதலும் கடைசியும் ஆக எம்ஜிஆர் தான் அப்படி ஒரு வெற்றியை பார்த்தது. அப்படி இருக்கும் பட்சத்தில் மக்களின் வரவேற்பு எப்படி இருக்கும் என்று கூட யோசிக்காமல் இவர் ஏன் இப்படி ஒரு முடிவை எடுக்கிறார் என ரசிகர்களுக்கே வருத்தம்.

நாமே அவரைப் பற்றி இவ்வளவு யோசிக்கும் பொழுது அவருடைய வாழ்க்கையை பற்றி அவர் யோசிக்காமல் இருப்பாரா. முழு அரசியலுக்கு வருவதற்கு முன்பே நிறைய தொழில்களில் பல முதலீடுகளை செய்கிறார் தளபதி.

தளபதி பாண்டிச்சேரி முதலமைச்சரை சந்திக்க இதுதான் காரணம்

ஏற்கனவே தன்னுடைய மனைவி சங்கீதா மற்றும் அம்மா சோபா பெயரில் நிறைய திருமண மண்டபங்கள் இவருக்கு இருக்கிறது. தற்போது பாண்டிச்சேரியில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பெரிய திருமண மண்டபத்தை கட்டிக் கொண்டிருக்கிறார் தளபதி.

இதற்கு மொத்த ஐடியா கொடுத்தது புஸ்ஸி ஆனந்த். அவருக்கு பாண்டிச்சேரியில் நல்ல செல்வாக்கு இருப்பதால் விஜய்க்கு இப்படி ஒரு ஐடியா கொடுத்திருக்கிறார்.

இதன் விவகாரமாகத்தான் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு விஜய் பாண்டிச்சேரி முதலமைச்சரை நேரில் சந்தித்திருக்கிறார். அரசியலில் அடித்தளம் போடுவதற்கு முன்பே வருமானத்திற்கு அடித்தளம் போட ஆரம்பித்திருக்கிறார் விஜய்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →