GOAT: தளபதி விஜய் நடித்த கோட் படம் இன்று உலகம் எங்கும் ரிலீஸ் ஆகி இருக்கிறது. எதிர்பார்த்தபடி கோட் படத்தின் சிறப்பு காட்சி என்று ஒன்பது மணிக்கு வெளியானது. நடிகர் விஜய் நடிப்பில் ரிலீசான கடைசி ரெண்டு படங்களை விட, இந்த படம் அதிகமான பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது.
முதல் காட்சி ரசிகர்களுக்கான சிறப்பு காட்சி என்பதால், இனி தான் பலதரப்பட்ட மக்களின் விமர்சனங்களை எதிர்பார்க்க முடியும். வெங்கட் பிரபு இயக்கத்தில் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, அஜ்மல் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாள்களோடு இந்த படம் உருவாகி இருக்கிறது.
சைலண்டாக அரசியல் பேசிய தளபதி
விஜய் இந்த படத்தில் தன்னுடைய அரசியல் பற்றி பேசுவாரா என்பது எல்லோருடைய எதிர்பார்ப்பாகவும் இருந்தது. காரணம் கோட் படப்பிடிப்பு தொடங்கிய பிறகு தான் விஜய் தான் அரசியலுக்கு வரப்போவதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
ஒரு பக்கம் படப்பிடிப்பு, இன்னொரு பக்கம் அரசியல் என கடந்த ஆறு மாதங்களாக இரட்டை குதிரையில் பயணம் செய்தார். இதனால் தான் இந்த படத்தில் விஜய் தன்னுடைய அரசியலைப் பற்றி பேச வாய்ப்பிருக்கிறதா என எல்லோருக்கும் எதிர்பார்ப்பு ஆரம்பித்தது.
இதுவரை வந்த தகவலின் படி விஜய் அரசியல் சம்பந்தப்பட்ட எந்த விஷயத்தையும் இந்த படத்தில் பேசவில்லை என தெரிகிறது. அது எப்படி வெங்கட் பிரபு படத்தில் இது நடக்காமல் இருக்கும் என எல்லோருக்குமே சந்தேகம் இருந்தது.
யாரும் எதிர்பார்க்காத படி சைலன்டாக சம்பவம் செய்திருக்கிறார் தளபதி விஜய். இந்த படத்தில் விஜய் முழுக்க ஒரு காரில் பயணிப்பார். அந்த காரின் நம்பர் பிளேட்டை கவனித்தவர்களுக்கு இந்த செய்தி புரியும். இந்த காரின் நம்பர் பிளேட் TN07CM2026 என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.
2026 இல் விஜய் தான் முதலமைச்சர் என்பதை சைலன்ட் ஆக கார் நம்பர் பிளேட் மூலம் சொல்லி இருக்கிறார்கள் பட குழுவினர். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பெரிய அளவில் வைரல் ஆகி வருகிறது.
விஜய், வெங்கட் பிரபு கூட்டணி ஜெயித்ததா.?
- வொர்க் அவுட் ஆனதா விஜய், வெங்கட் பிரபுவின் மேஜிக்.?
- டிக்கெட் 2000 ரூபாயா.!
- GOAT படத்தின் ஃபர்ஸ்ட் சாய்ஸ் விஜய் இல்லை