பொங்கல் பண்டிகை அன்று தளபதி விஜயின் வாரிசு படம் தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளில் ரிலீஸ் ஆகிறது. அதே சமயம் தல அஜித்தின் துணிவு படமும் வெளியாகிறது. ஆகையால் 8 வருடங்களுக்குப் பிறகு தல, தளபதி இருவரும் நேருக்கு நேர் மோதிக் கொள்வதால் கோலிவுட்டில் ஏற்கனவே பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.
இதைத் தவிர அக்கடதேசத்திலும் வாரிசு படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துக் கொண்டிருக்கிறது. அதாவது வாரிசு படம் ஆந்திராவில் 6 தியேட்டர்களை ஆக்கிரமித்து இருக்கிறது. ஆனால் தெலுங்கு சூப்பர் ஸ்டாரர்களான சிரஞ்சீவியின் வால்டர் வீரய்யா திரைப்படமும், நந்தமுரி பாலகிருஷ்ணாவின் வீர சிம்ஹா ரெட்டி திரைப்படம் வெளியாகிறது.
Also Read: விஜய்க்கு பயத்தை காட்டிய அஜித்.. துணிவை தட்டி தூக்க தளபதி எடுத்த பிரம்மாஸ்திரம்
இந்த படங்களுக்கு வாரிசு படத்தை விட குறைந்த அளவு தியேட்டர்கள்தான் கிடைத்துள்ளது. ஏனென்றால் வால்டர் வீரய்யா திரைப்படம் 4 திரையரங்குகளிலும், வீர சிம்ஹா ரெட்டி 3 திரையரங்குகளில் மட்டுமே ரிலீஸ் ஆகிறது.
அதேபோல் அஜித்தின் துணிவு படம் ஒரே ஒரு திரையரங்கில் மட்டுமே ஆந்திராவில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இவ்வாறு கோலிவுட்டில் பாக்ஸ் ஆபீஸ் நாயகனாக திகழும் விஜய், ஆந்திராவிலும் அசைக்க முடியாத இடத்தை பிடித்திருப்பது தமிழ் சினிமாவை பெருமைப்படுத்தியுள்ளது.
Also Read: 250 கோடி, 300 கோடி கதையெல்லாம் சும்மாவா.. உள்ளூரில் வியாபாரம் ஆகாத தளபதியின் வாரிசு
அதுமட்டுமின்றி விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடித்திருக்கும் வாரிசு படத்தின் பாடல்களும் சமீபத்தில் வெளியாகி வைரலாகுவதால், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
நிச்சயம் இந்த படம் பாக்ஸ் ஆபிஸை தெறிக்க விடும். எனவே பல போட்டிகளுக்கு இடையே வாரிசு படம் தான் அதிக திரையரங்குகளை ஆக்கிரமித்திருப்பதால் நிச்சயம் இந்த படம் பாக்ஸ் ஆபிஸை தெறிக்க விடும். இன்று தமிழகத்தில் மட்டுமல்ல ஆந்திர திரை உரிமையாளர்களும் வசூலை வாரி குவிக்க காத்திருக்கின்றனர்.
Also Read: ஓவரா ஆட்டம் காட்டும் வாரிசு படக்குழு.. ரசிகர்கள் என்ன முட்டாளா? பொங்கி எழுந்த நெட்டிசன்கள்